மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’ | Maha Periyava: Spiritual stories - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

மகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு!’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியங்கள்: கேஷவ்

கா பெரியவாளை தரிசனம் செய்து ஆசி பெற வந்தவர்கள் ஏராளமானோர். தங்களுக்குத் தோன்றும் பலவகையான சந்தேகங்களை மகானிடம் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லி விளக்குவார் மகா பெரியவா. ஒருமுறை, வட இந்தியாவிலிருந்து அன்பர் ஒருவர் மகாபெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தார்.

“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்...” என்று தயக்கத்துடன் இழுத்தார் அவர்.

“வாயு புத்திரனைப் பற்றியதுதானே... தாராளமாகக் கேளேன்” என்றார் சுவாமிகள். அவர்தம் வதனத்தில் மந்தகாசப் புன்னகை.

வட நாட்டுக்காரர் தன் ஐயத்தைத் தெரிவித்தார்.

“சுவாமி! ஆஞ்சநேயர், பலருக்கும் இஷ்டதெய்வமாக இருக்கிறார். எல்லோருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால், அவருக்கு அணிவிக்கப்படும் மாலையைப் பற்றித்தான் என் சந்தேகம்.”