கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்? | Spiritual Questions and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

கேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

? நாங்கள் குடியிருக்கும் வீட்டில் இரவு, பகல் எப்போதும் வௌவால்களின் நடமாட்டம் உள்ளது. இது தோஷம்தானா? ஆம் எனில், ஏதேனும் பரிகாரம் கூற வேண்டுகிறேன்.

- கூந்தலூர் வி.சந்திரசேகரன், கும்பகோணம்

வௌவால்கள் நடமாட்டம் வீடுகளில் இருப்பது சரியானதல்ல. எனவே, எல்லாம்வல்ல இறைவனிடம், `எங்களது வீட்டில் உள்ள வௌவால்கள் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்று விட வேண்டும்' என்று வேண்டி, தினசரி தூபம் இட்டு வழிபட்டு வாருங்கள். கடவுளின் அருளால் விரைவில் வெளவால்களின் நடமாட்டம் நீங்கும்.

? பக்தர்களால், நேர்த்திக்கடன் பொருட்டு தெய்வத் துக்கு உடைக்கப்படும் சிதறுகாயை (தேங்காய்) மற்ற அன்பர்கள் எடுத்துச் சாப்பிடுவது, தோஷம் ஆகுமா?

நம்முடைய கர்ம வினைகள் இந்தப் பிறவியோடு  முடிந்து போகுமா அல்லது அடுத்தப் பிறவியிலும் தொடருமா?

-கோ.ஞானசேகரன், நாச்சியார்கோவில்

நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் பணம் செலுத்துகிறோம். அந்தப் பணம், கருவூலத் துக்குச் சென்றுவிடும். நாம் பணம் செலுத்தும் அதேநேரம், வேறொருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுப்பதற்கு விண்ணப்பித் தால், நாம் செலுத்திய பணம் அவருக்குக் கொடுக்கப்படவும் சாத்தியம் உண்டு. ஆனால், அதற்காக நமது சேமிப்பிலிருந்து பணம் குறைந்துவிடப் போவதில்லை.

அதேபோல், ஒருவர் நேர்த்திக் கடனாக சிதறு தேங்காய் உடைத்தால், அதன் மூலம் அவருக்கு உரிய பலன் கிடைத்துவிடும். `அதை எடுத்துச் சாப்பிடவேண்டும்' என்று ஒருவருக்கு விதியிருப்பின்,  அவர் அதை எடுத்துச் சாப்பிடவே செய்வார். இதனால் அவருக்கு எந்த தோஷமும் ஏற்படாது.  சிலர், பிராயச்சித்தத்துக்காகச் செய்யும் கர்மாக்களினால் ஏற்படும் தோஷங்களைக்கூட, நல்ல உபாசனை உள்ள வேதியர்கள், தங்கள் தபோ பலத்தினால் போக்கிக் கொள்வார்கள். எனவே, வீணான அச்சம் தேவையில்லை.

உலகத்திலுள்ள அனைத்தும் கடவுளுக்கு உரியவையே. கடவுள் நமக்கு அளித்துள்ள பொருள் களை நாம் கடவுளுக்கு அர்ப்பணித்ததுமே அவை தூய்மைப்படுத்தப்பட்டு, நமக்கு இறைவனின் பிரசாதமாக அளிக்கப்படுகின்றன.