‘மறக்கக் கூடாத பாடம்!’ | Spiritual Titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2019)

‘மறக்கக் கூடாத பாடம்!’

ஓவியம்: பிள்ளை

`கடின உழைப்புக்கு ஈடு, இணை எதுவுமில்லை. அது இல்லாமல், எந்தக் கனவும் நனவாவதில்லை.’ மனித சக்தியும், மனிதர்களின் கடின உழைப்பும் இல்லாமல் இந்த உலகின் நவீன, அசுர வளர்ச்சி சாத்தியமே இல்லை. இந்த உண்மையை எளிதாக விளக்கும் பழைய கதை ஒன்று உண்டு. பல நேரங்களில் பரண்மேல் போட்டதுபோல் போட்டுவைத்திருக்கும் பழசுகளைத் தூசு தட்டி எடுத்துப் பார்க்கவேண்டியதும் அவசியம் என்றுதான்படுகிறது.

அந்தச் சின்னஞ்சிறு கிராமம்தான் பாண்டிக்குப் பூர்வீகம். சோம்பேறி; உடல் வணங்காது. அதனாலேயே வாய்த்த வறுமை. உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. பசித்தால் யார் வீட்டுக்கு முன்னாலாவது போய் நின்று, ``அம்மா...’’ என்று குரல் கொடுப்பான். கிராமத்து மனிதர்களுக்கு நெஞ்சில் ஈரம் அதிகம். இரக்கப்பட்டு இருக்கிற உணவைப் போட்டுவிடுவார்கள். அவன், அதைச் சாப்பிட்டுவிட்டு ஆற்றங்கரை அரசமரம், ஊர்க்கொடி நான்கு கால் மண்டபம் அல்லது தன் குடிசை... என எங்கேயாவது உறங்கப் போய்விடுவான். சாப்பிடுவதும் உறங்குவதும் மட்டுமே வாழ்க்கையாக இருந்த அவனுக்கு ஒரு கனவும் இருந்தது. `எப்படியாவது பெரும் பணக்காரனாகிவிட வேண்டும்’ என்கிற ஆசை. அதே நேரத்தில் அதற்காக அவன் உழைக்கத் தயாராக இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க