2019 - புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

கனவுகள் நனவாகும்! - புத்தாண்டு பொதுப் பலன்கள்

நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, தட்சிணாயனம் ஹேமந்த ருதுவில், கிருஷ்ணபட்சத்து தசமி திதியில், சமநோக்கு கொண்ட சித்திரை நட்சத்திரம் - துலாம் ராசி, கன்னி லக்னத்திலும், அதிகண்டம் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம் ஜீவனம் நிறைந்த அமிர்தயோக நன்னாளில், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி குரு பகவானின் ஆதிக்கத்தில் (2+0+1+9=3)இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

இந்த வருடத்தின் லக்னம் மற்றும் வருடப்பிறப்பு நாளின் விதி எண் (5) உள்ளிட்ட பல அம்சங்கள் புதனின் ஆதிக்கத்தில் வருவதால் மக்களிடையே விழிப்பு உணர்வு பெருகும். ஜனநாயகம் தழைக்கும். பள்ளி மாணவர் களிடையே பொது அறிவு வளரும். விளையாட்டில் உலக அரங்கில் மாணவர்கள் சாதிப்பார்கள். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick