தோஷங்கள் நீங்கும்... பிள்ளை வரம் கிடைக்கும்!

பாடூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் - ஓவியம்: ம.செ

பிரம்மசரியம், வானப்ரஸ்தம், சந்நியாசம் ஆகிய ஆஸ்ரமங்களைவிட, கிரகஸ்தாஸ்ரமம்தான் யக்ஞம், தானம், தர்மம், சந்ததி விருத்தி ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கிறது. இருபத்தோரு தலைமுறைகளைச் செழிப்பாக்குவது திருமணம். எனினும் முன்வினை, கிரக தோஷங்கள் காரணமாக அன்பர்கள் சிலருக்குச் சந்தான பிராப்தி கைகூடாமல் போய்விடுகிறது.

பிள்ளைப் பேறின்மைக்கு பல தோஷங்கள் காரணம் ஆகின்றன. அவற்றுள் முக்கியமானது நாக தோஷம். நாகத்தைக் கொல்வது, நாகப் பாம்பின் புற்றை இடிப்பது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படுகிறது. தாயாரைச் சரியாக கவனிக்காமல் விட்டு, அவள் சாபத்தைச் சம்பாதித்தாலும் குழந்தை பிறக்காது. மனைவியையே சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் பார்யாள் மூலம் தோஷம் ஏற்படும். பசுவைக் கொன்றாலும் கோ தோஷம் உண்டாகி அதன் காரணமாகப் பிள்ளை பிறப்பது தடைப்படும். இப்படி நிறைய தோஷங்கள் உண்டு. இவற்றைக் கண்டறிந்து தோஷத்துக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick