திருமூலர் தரிசித்த சிவதாண்டவம்!

முனைவர் மா.கி.இரமணன்

`ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்று மார்கழித் திருவாதிரையின் பெருமையைப் பேசுகிறது, மயிலை திருஞான சம்பந்தர் தேவாரம். சிவலாயங்கள் அனைத்தும் ஆருத்ரா தரிசனம் காணும் அற்புதத் திருநாள் மார்கழித் திருவாதிரை. அடியவர் சேந்தனார் இறைவனுக்குக் களியமது படைத்ததும், அவருக்கு எம்பெருமான் முக்திப்பேறு அருளியதும் திருவாதிரை திருநாளில்தான்.

அதுமட்டுமா? புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் தில்லை அம்பலவாணன் ஆடல்கோலம் காட்டிய நாளும் இதுவே. இந்த இருவர் மட்டுமின்றி, தில்லைநாதனின் தாண்டவ தரிசனத்தைக் கண்ட வேறு அருளாளர்களும் உண்டு. ஆம்! பதஞ்சலி, புலிக்கால் முனிவர், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், சிவயோக மாமுனி ஆகியோரும், திருமந்திரம் அருளிய திருமூலரும் திருத்தாண்டவத்தை தரிசித்து மகிழ்ந்த அருளாளர்கள்.

அரனாரின் ஆடலை அருளாளர்கள் தரிசிக்கத் துடித்ததும், பெரும் தவமும் யோகமும் செய்து சிவ தாண்டவம் கண்டு உவப்புற்றதும் ஏன்? 

சிவதாண்டவத்தின் மகிமை அப்படி! அவன் ஆடினால்தான் அகிலமும் இயங்கும். பரமன் தன் ஆட்டத்தால் ஐந்தொழில்களையும் நடத்துகிறான் என்கின்றன ஞானநூல்கள்.

பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் சிவனார் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மட்டுமின்றி, இந்தத் தாண்டவத்துடன் சேர்த்து அஜபா தாண்டவம், சுந்தரத் தாண்டவம், பிரம்ம தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் ஆகிய பஞ்ச தாண்டவங்களையும் இங்கு ஆடுகிறார் ஈசன் என்றும் கூறுவர். அதாவது, ஐந்தொழில்களையும் இங்கேயே நடத்துகிறார் என்றும் கூறுவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick