தாண்டவ தரிசனம்

கா ஞானியான குமரகுருபரர் சிவஞான உபதேசம் பெற தருமை ஆதீன மகா குருவான மாசிலாமணி தேசிகரிடம் வேண்டினார். அவரோ அதற்கு முன்பாக தல யாத்திரை சென்றுவரும்படி அவரைப் பணித்தார். குறிப்பாகக் காசி செல்லுமாறு கூறினார். காசி சென்றுவர நெடுநாள் ஆகுமே என்று தயங்கிய குமரகுருபரர். காசியை விட வீசம் அதிகமான தில்லைக்குப் பயணப்பட்டார்.  தில்லையம்பதியில் ஆடும் அந்த சபாபதி, குமரகுருபரரை அப்படியே முழுமையாக ஆட்கொண்டுவிட்டார். ஆம், சிதம்பரத்து ஆடல் நாயகனைக் கண்ட குமரகுருபரர் நாள் கணக்கில் தங்கிவிட்டார். அங்கு தான் ‘“சிதம்பர மும்மணிக்கோவை’ என்ற அற்புதப் பாமாலையை இயற்றினார். வைரம், வைடூரியம், கோமேதகம் போன்று நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூன்று வடிவங்களில் பாடல்களை எழுதி நடராஜப் பெருமானை அபிஷேகித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick