ஆலயம் தேடுவோம்: சூட்சும உருவில் பைரவர்கள் வழிபடும் பரமேஸ்வரன்!

ஏகாம்பரநல்லூர் ஏகாம்பரநாதர் திருக்கோயில்

ஓர் ஊர் நல்ல ஊராகவும், சகல வளங்களும் நிறைந்த செழிப்பான ஊராகவும், சான்றோர்களால் சிறப்புற்றும் திகழவேண்டும் என்றால், அந்த ஊரில் ஓர் ஆலயம் அவசியம் இருக்கவேண்டும். ‘கோயில்  இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது முதுமொழி.

இதனை உணர்ந்த மகான்களும் மன்னர்களும் நம் தேசமெங்கும் எண்ணற்ற திருக்கோயில்களை ஏற்படுத்தினர். அவற்றில் தங்குதடையின்றி நித்ய  பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறுவதற்குத் தேவையான மானியங்களையும் வழங்கினார்கள்.பிற்காலத்தில் அந்நியர்களின் தாக்குதல்களாலும் ஆதிக்கத்தாலும் பல கோயில்கள் இடிக்கப்பட்டன. இன்னும் பல ஆலயங்கள் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டன. அதேநேரம், கோயில் சொத்து கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் தொடர்ந்தன. ஆக்கிரமிப்புகளால் பொலிவழிந்த ஆலயங்களும் உண்டு.

இவை எல்லாவற்றையும் மீறி, இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் பொலிவுடன் திகழ்கின்றன என்றால், அதற்குக் காரணம் நம் மண்ணில் செழித்தோங்கி திகழும் தர்மம்தான்.

அறம் செழிக்கும் தேசம் என்பதால்தான்... பல காரணங்களால் அடையாளம் தெரியாமல்போன பல ஆலயங்கள் மறுபடியும் புதுப்பொலிவுடன் எழுவதும், அவை அருளொளி பரப்பி பக்தர்களின் துன்பங்களைப் போக்குவதுமான அற்புதங்கள் நிகழ்கின்றன.

அப்படியோர் அற்புதமே, இதோ இப்போது நாம் தரிசிக்கும் ஏகாம்பர நல்லூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick