பாதுகையின் மகிமை!

வைணவ சமயத்துக்கு ஓர் அரிய பொக்கிஷம் ஸ்வாமி வேதாந்த தேசிகர். இவர், காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள தூப்புல் எனும் சிறிய கிராமத்தில் புரட்டாசியில், திருவோண நட்சத்திரத்தில், திருவேங்கடவனின் திருமணியின் அம்சமாக திருஅவதாரம் செய்தார்.

திருக்கோயிலின் மணி எங்கெங்கும் சங்கநாதம் ஒலிப்பது போல், ஸ்வாமி தேசிகரின் படைப்புகள் பாரெங்கும் அறம் பரப்பி ஒளிவீசித் திகழ்வதாகும். இவரின் 750-வது திருநட்சத்திர வைபவம் நம் தேசத்தில் மட்டுமின்றில் லண்டனிலுள்ள ஹவுஸ் ஆஃப் காமன் (House of common)  சபையிலும் கொண்டாடப்படுகிறது. இதுவொன்றே போதும், அவருடைய படைப்புகளின் சிறப்பை எடுத்துக்கூற!

ஸ்வாமி நிகமாந்த மகாதேசிகனின் கிரந்தங்கள் பல உண்டு. அவற்றில் தலைசிறந்தது பாதுகா ஸகஸ்ரம். 32 பத்ததிகளையும் 1008 ஸ்லோகங் களையும் கொண்ட இந்த பொக்கிஷம், ஒரே இரவில், ஒரு ஜாமத்தில் அருளப்பட்டதாம். அரங்கனின் திருவடிகளைப் (பாதுகை) பற்றி சிறப்பிப்பதாகத் திகழும் இந்த நூல், ஸ்வாமி நம்மாழ்வாரைப் பற்றிய ஸ்தோத்திர ரூபமான நூலாகவும் திகழ்கிறது. சம்ஸ்கிருதத்தில் அருளப்பட்ட இந்நூலை தமிழில் உரைநடைப் படுத்தி, அதன் மேன்மையை விளக்கியுள்ளனர், வைணவ மத பூர்வாச்சார்யார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick