இப்படிக்கு: இனிதே தொடரட்டும் திருப்பணிகள்!

ரணம் சமர்ப்பித்து ஐயனைச் சிறப்பித்திருந்தது சக்திவிகடன். சபரிமலை குறித்த தகவல் ஒவ்வொன்றும், இதுவரை நாங்கள் அறிந்திராதவை. மிக்க நன்றி!
- கே.ரமணி, மதுரை

சிவமகுடம் தொடர்கதை விறுவிறுப்பு. மங்கையர்கரசியாரின் சமகால சரிதத்தை மிக அற்புதமாக விளக்குகிறது, இந்தத்  திருக்கதை!
- சு.ராமசுப்பு, கடலூர்

சுயம்வர பார்வதி ஹோமம் குறித்த கட்டுரையும் அறிவிப்பும் எங்களுக்கான வரப்பிரசாதம். அவசியம் கலந்துகொள்கிறோம்.
- எம்.மாலதி, சென்னை-17

த்தாரிகுப்பம் சிவாலயத்தில் நடந்த உழவாரப்பணி குறித்து படித்து நெகிழ்ந்தோம். விரைவில், நாங்களும் கரம்கொடுப்போம். இனிதே தொடரட்டும் தங்களின் இறைப்பணிகள்!
- கோ.வேலுபாலன், திண்டிவனம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick