‘நன்றி’ சொல்வோம்!’

ஓவியம்: பிள்ளை

`இன்று எத்தனைப் பேருக்கு  `நன்றி’ சொன்னீர்கள்?’ - இந்தக் கேள்விக்கு சிலர் யோசித்து,  `ஒன்று, இரண்டு பேருக்கு...’ என்று பதில் சொல்லக்கூடும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் பல நல்ல விஷயங்களுக்குக்கூட `நன்றி’ சொல்வதில்லை என்பதே இங்கே யதார்த்தம். அமெரிக்கா, கனடா, லைபீரியா மற்றும் சில கரீபியத் தீவுகளில் ஒவ்வோர் ஆண்டும்,  `நன்றி செலுத்தும் தினம்’ (Thanksgiving Day) என்று ஒரு நாளையே கொண்டாடுகிறார்கள். அது, தேசிய விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு. அமெரிக்காவில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பரில் வரும் நான்காவது வியாழக்கிழமையை  `நன்றி செலுத்தும் தின’மாகக் கடைப்பிடிக்கிறார்கள். அறுவடை முடிந்ததும், இயற்கைக்கு நன்றி செலுத்தும்விதமாக ஆரம்பத்தில் இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick