ராசிபலன் - ஜனவரி 1 முதல் 14 - ம் தேதி வரை | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/01/2019)

ராசிபலன் - ஜனவரி 1 முதல் 14 - ம் தேதி வரை

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பண வரவு உண்டு. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். உங்களின் பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். உங்களில் சிலர், விலையுயர்ந்த சமையலறைச் சாதனங்களை வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

ராசிநாதன் செவ்வாய் 12 - ம் வீட்டில் மறைந்திருப்பதால், சகோதர வகையில் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை இப்போது மேற்கொள்ள வேண்டாம். அகலக்கால் வைக்காமல் பொறுமையுடன் செயல்படவேண்டிய காலம் இது. உத்தியோகத்தில், மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத்துறையினரே, உங்களின் படைப்புத் திறன் வளரும்.  சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதுடன், அதன் மூலம் புகழும் அதீத செல்வாக்கும் அடைவீர்கள்.

இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறும் நேரம் இது.