விக்கிரமாதித்தன் எங்கே இருப்பார்?

ஓவியம்: பிள்ளை

`வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளாதே!’ என்று நம் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது. யாரிடமும் எதையும் கவனமாகப் பேச வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட வழக்குமொழி இது. பெரியவர்களிடம் பேசுவது இருக்கட்டும்; குழந்தைகளிடமும் அளந்துதான் பேச வேண்டும். அதற்கு அவர்களின் துடுக்குத்தனம் காரணம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. குழந்தைகளின் வெள்ளந்தியான மனம்; தாங்கள் உண்மை என்று நம்புகிற விஷயத்தை விட்டுக் கொடுக்காத குணம்... இவைதான் காரணம். சில நேரம் அவர்கள் சொல்லும் பதில் நாம் எதிர்பாராததாக இருக்கும்; நம்மை தர்மசங்கடத்தில்கூட  ஆழ்த்திவிடும். சேகர், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவன். வகுப்பறையில் ஆசிரியர் அறிவியல் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். கடல்வாழ் உயிரினமான திமிங்கிலத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick