தைப்பூச தரிசனம்!: உருவோ அருவோ... முருகா அருள்வாய்!

அற்புதங்கள் நிகழ்த்தும் அபூர்வ துதிப்பாடல்!வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

முத்தமிழ் முருகனைப் போற்றும் உத்தம நூல்கள் ஏராளம் உண்டு இவ்வுலகில். அவற்றில் குறிப்பிடத்தக்கது - குவிபா ஒருபது. மகான் வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளால் அருளப்பட்டது. தமிழ் எழுத்துகளில், உதடுகள் குவிவதாலும் ஒட்டுவதாலும் வரும் 119 எழுத்துக்களை மட்டும் கொண்டு உருவான 10 பாடல்களைக் கொண்ட தொகுப்பு என்பதால், `குவிபா ஒருபது' எனப் பெயர்பெற்றது. இந்தப் பாடல்களுக்கு தண்டபாணி ஸ்வாமிகளின் சீடரான சோழவந்தானூர் கந்தசாமி ஸ்வாமிகள் உரை வகுத்துள்ளார்.

அற்புதங்களை நிகழ்த்தவல்ல `குவிபா ஒருபது' பாடல்கள் உங்களுக்காகவும்...

நூல் காப்பு ...

ஒருபது குருபா ஓதுவ கோடு
மருவுபேர் உவாவும் மாவடும் வேலுமே!

கருத்து: விநாயகரான யானையும், கயமுகாசுரனைக் கொன்ற அவரது ஆயுதமும், முருகப்பெருமானின் வேலும் இந்த நூலைக் குற்றமறப் பாடுவிக்கும் திறனை அருளட்டும்.

துதிப்பாடல்கள்...

முருகோ விபவா மூவா மேலோர்
உருவா வருவாய் ஓதோ(து) ஓமூ(டு)
ஒருவா துறும்ஆ வூமா வேமா
குருகோ லும்அவை கொளுமால் உகுமே.

கருத்து:  பெருமையுடைய முருகக்கடவுளே, பெரியோர் வடிவமாக அன்பரின் முன் வருபவரே, பிரணவத்தின்கண் உள்ள அகார, உகார, மகாரங்களின் பொருளை உபதேசிப்பீராக. அதனால் சகலரின் மயக்கமும் நீங்கட்டும்.

கூவா வருமா குருகும் வேலும்
பாவால் நுவலும் பவம்ஈ குவையோ
கோவாழ் ஒருவா குவவாம் வாகு
ஓவா ஏவா உமைகோ வதுவே


கருத்து:  மலைகளில் வசிக்கும் ஒப்பில்லாதவரே, புஜத்தின்கண் அம்புடைய சிவகுமாரரே, உமது சேவற்கொடியும் வேலாயுதமும், தமிழோதும் பிறவியை அளிக்காதோ அல்லது முக்தியைத்தான் கொடுப்பாயோ. அல்லது வேறு அருள் யாது செய்வாயோ அறியேன்!

கோகோ அருளோ கொடுமைப் படுமோ
மாகோ துறும்எம் மைவவா கொளுமோ
ஆகோ டுமுவா அதுகூ டுகுகோ
போகோ வுருவப் புதுமா வுருவே

கருத்து:   விநாயகர் விரும்பி நட்புகொள்ளத்தக்க குகக்கடவுளே, பிரணவ வடிவமான மயில் வாகனத்தையுடைய தெய்வமே, உமது அருள் எங்களை ஆட்கொள்ளுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick