தைப்பூச தரிசனம்!: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!

கடையம் பாலன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே... மேற்குமலைத்தொடரின், ஒரு சிதறலாகத் திகழ்கிறது தோரணமலை. முருகன் குடிகொண்டிருக்க, அவனது அருள்சாந்நித்தியம் தழைத்தோங்கித் திகழும் இந்த மலைப்பகுதியே, ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது என்கிறார் சித்தர் ஆராய்ச்சியாளர் காமராஜ்.

‘‘கயிலாய பர்வதத்தில் நடைபெற்ற சிவனாரின் திருக்கல்யாணத்தின் போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது,  ஈசனின் ஆணைக்கிணங்க, உலகைச் சமன் செய்யும்பொருட்டு அகத்தியர் தென்திசை வந்ததும், உலகம் சமநிலை பெற்றதும், தொடர்ந்து முருகனருளால் அவர் இலக்கணம் சமைத்ததும் நாமறிவோம். அதன்பிறகு, அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழவேண்டும் எனும் நோக்கில், மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

மருத்துவம் என்றால், இப்போது உள்ளது போன்று உடற்கூறுகளையும் அதற்கான மருந்துகளையும் மட்டுமே அடிப்படையாகக்கொண்டதல்ல.இந்த மண்ணிலிருந்து விண் வரையிலும் உலக இயக்கம் குறித்த ஒட்டுமொத்த ஞானத்தோடு தேர்ச்சி அடைந்தால்தான், ஒருவர் முழு வைத்தியன் ஆகமுடியும். இதற்காக அகத்தியர் 1,24,000 கிரந்தங்களை வகுத்தாராம். தான் கண்டறிந்த சித்த மருத்துவக் குறிப்புகளைக் கொண்டு `அகத்திய வைத்திய சேகரம்’ என்ற நூலையும் அருளினார்.

தம் சீடர்களை வானவியல், வேதியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்யப் பணித்தார். அந்த ஆராய்ச்சிகளின்படியே பாடத்திட்டங்களை வகுத்தார். அவற்றில் முதன்மையானது தமிழ் இலக்கிய - இலக்கணம் கற்பதே.

தொடர்ந்து பீச கணிதம், மருத்துவ ஆய்வு வகைகள், வான சாஸ்திரம், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாடகம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், ரசாயன ஆய்வு மற்றும் அதற்கான அனுபவ பயிற்சி என நீள்கிறது அகத்தியர் வகுத்த பாடத்திட்டங்கள். மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், ரணவாடகம், உடல் தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை குறித்த படிப்புகளும் உண்டு. இவைமட்டுமின்றி, ஆறு ஆதார நிலைகளை அறிதல் பற்றிய கலைகளும் கற்றுகொடுக்கப்பட்டன’’ என்கிறார் காமராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick