கேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா? | Spiritual Questions and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

கேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

? ஒருவரின் பிறந்த தினத்தை நட்சத்திரத்தின் அடிப்படையிலும், அவர் மறைந்த தினத்தை திதியின் அடிப்படை யிலும் கடைப்பிடிப்பது, ஏன்?

- எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை - 32

ஒவ்வொரு மாநிலத்துக்கும் சில பழக்கவழக்கங்கள் மாறுபடும். இவற்றை நம் சாஸ்திரங்கள், ‘தேசா சாரம்’ என்று கூறும். தாங்கள் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட இடங்களில், ஏதேனும் ஒன்றைத் தாங்கள்  கடைப் பிடிக்கலாம். `இப்படித்தான் செய்ய வேண்டும்' என்று வரையறை செய்யப்பட்டிருக்கும் இடங்களில், அதன்படியேதான் நாம் கட்டாயம் செயல்படவேண்டும்.

பிறந்த தினத்தை நட்சத்திரத்தின் அடிப்படையிலும் மறைந்த தினத்தை திதியின் அடிப்படையிலும் அனுசரிப்பது, பாரதத்தின் தெற்குப் பகுதியில்... குறிப்பாகத் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில், பிறந்த தினத்தையும் திதியின் அடிப்படையில் கொண்டாடும் வழக்கம் உள்ளது.

இரண்டுமே சரிதான். எப்படி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரது பெயரையோ அல்லது முகவரியையோ பதிவு செய்தால், அவரைப் பற்றிய முழு விவரங்களும் கணினியின் மூலம் கிடைக்கிறதோ... அப்படியே அவரவர் பிறந்ததினத்தை, திதியைக்கொண்டோ அல்லது நட்சத்திரத்தைக்கொண்டோ கொண்டாடினாலும், அது அவருக்கு உரிய பலனை அளிக்கவே செய்யும்.

ஆனால், இறந்த தினத்தை மட்டும் திதியை அடிப்படையாகக் கொண்டே சிராத்தம் செய்யவேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கடவுளின் ஆட்சியின் கீழ் இயங்கி வருகின்றன. அவை என்ன செய்தாலும், எங்கு சென்றாலும், என்ன நினைத்தாலும் அனைத்தும் கடவுளால் பதிவு செய்யப்படுகின்றன.

இதைக் கவனத்தில்கொண்டு, நாம் நமக்குரிய கடமைகளை சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் இணைக் கப்படுகிறோம் என்பதை உணர்ந்து செய்தால், மிகுந்த பயன் நமக்குக் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick