சோமயாகப் பெருவிழா! | Somayagam festival in mayiladuthurai - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/06/2019)

சோமயாகப் பெருவிழா!

சோமயாகப் பெருவிழா 8.6.19 - கோயில்திருமாளம்

சோமாசிமாற நாயனார், அந்தண குலத்தில் தோன்றிய அடியார். உலக நன்மைகள் அன்றி வேறு பலன் எதிர்பாராது வேள்விகள் செய்யும் உத்தமர். அகிலம் அனைத்தும் பயன்பெறச் செய்யப்படும் அற்புதமான சோமயாகத்தைச் செய்ய விரும்பினார் சோமாசிமாற நாயனார். அதன் அவிர்பாகத்தை அந்த ஆரூர் பெருமானே நேரில் வந்து பெற்று  அருளவேண்டும் என்று தீராத தாகம் கொண்டார். அதற்கு ஆவன செய்யுமாறு சுந்தரரை வேண்டிக்கொண்டார்.  சுந்தரரும் அப்படியே உதவ வாக்கு தந்தார். யாகமும் தொடங்கியது.

மறையோர் வேதம் முழங்க, சோமயாகம் சிறப்பாக நடந்துமுடியும் தறுவாயை எட்டியது. இனி அவிர்பாகம் இடவேண்டியதுதான் பாக்கி. சிவன் அங்கு பிரசன்னமாகப் போகும் தருணத்திற்காகக் காத்திருந்தனர் அடியார்கள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க