நலம் நலமறிய... ஆரோக்கிய ரேகை! | Health Line Palmistry - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

நலம் நலமறிய... ஆரோக்கிய ரேகை!

வ்வொருவர் உள்ளங்கையிலும் ஆதிபராசக்தியின் அம்சமான பஞ்சாங்குலி எனும் தேவதை வாசம் செய்கிறாள். அவளை விதி நாயகி என்று கூறினால் மிகையாகாது. இந்த தேவதையை உபாஸித்துதான் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் ஜோதிட, ஆரூட ரேகை சாஸ்திர வல்லுநனாக விளங்கினான் என்பது மஹாபாரத வரலாறு.

பஞ்சாங்குலி என்பது நமது உள்ளங்கையைக் குறிக்கும். பஞ்ச என்றால் ஐந்து; அங்குலி என்றால் விரல். ஐந்து விரல்கள் கொண்ட நமது உள்ளங்கையில் உள்ள ரேகைகள்தான் நம் தோற்றம், குணாதிசயங்கள், செயல்திறன், அறிவுத்திறன், ஆற்றல் திறன், வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்கும் சங்கேதங்கள் என்பர்.

தோல்வி மனப்பான்மை, மனச்சோர்வு, செயலின்மை, சோம்பேறித்தனம் இவை நீங்கி, புதிய உற்சாகம், செயல்படும் திறன், தன்னம்பிக்கை, வெற்றிக்காக உழைக்கும் ஊக்கம் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டு, ‘தன் கையே தனக்குதவி’ என திட சித்தத்துடன் முன்னேறவும், ஓரளவு நமது எதிர்காலத்தை நாமே ஊகித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும் பஞ்சாங்குலி தேவதை அருள்புரிகிறாள். அவள் அருளால் நாமும், நம் உள்ளங்கை உணர்த்தும் உண்மைகளை அறிந்து வருங்காலத்தை வளமாக்குவோம். அவ்வகையில், நம் தேகநலம் குறித்து ஆரோக்கிய ரேகை மூலம் அறியலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close