ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

சூரியனும் புதனும் லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பணவரவு உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். வீட்டைக் கட்டிமுடிக்க எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்துகொண்டு வலிய வந்து பேசுவார்கள். வழக்கில் வெற்றி உண்டு.

சுக்கிரனும் சாதகமாகச் செல்வதால், சொந்தபந்தங்களின் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். விலையுயர்ந்த ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல் நலம் சீராகும். உடன்பிறந்தவர்களுடன்  வீண்வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் வேலையாள்கள் லாபம் ஈட்டித் தருவர். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

தொலைநோக்குடன் இலக்கை அடையும் நேரம் இது.

[X] Close

[X] Close