மேல் மலையனூர் மகிமைகள்! | Melmalayanur Sri Angala Parameswari Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

மேல் மலையனூர் மகிமைகள்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரிலிருந்து  சுமார் 20 கி.மீ தொலைவில்; அமைந்துள்ளது மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம்.

இவ்வூரில் கோயில் கொண்டிருக்கும்  அங்காள பரமேஸ்வரி அம்மன் புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள். நான்கு திருக்கரங்களுடன், இடக் காலை மடித்து, வலக் காலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி அருள்காட்சி தருகிறாள்.

அம்மனுக்கு அருகிலேயே மிகப் பெரிய புற்றும் காணப்படுகிறது. புற்று வடிவில் தோன்றியதால், அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயர். தண்டேஸ்வரி என்ற திருப்பெயரும் உண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close