‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’ | Thiriyambagapuram Thiriyambageeswarar temple worship - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

‘முக்கண்ணனின் ஊர் எங்கேயிருக்கு..?’

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

ந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களை தரிசிக்க ஆவல் கொண்டு மகாலிங்கம் என்ற அன்பர் மகாராஷ்டிரத்தில் உள்ள ‘திரியம்பகம்’ எனும் தலத்துக்குச் சென்றார். தாம் செய்து வந்த தொழிலுக்காக வாங்கிய கடன் தொல்லையும், வர வேண்டிய பாக்கியும் அவரை மனநிம்மதியில்லாமல் சஞ்சலப்பட வைத்தது. இந்நிலையில் திரியம்பகம் சென்று திரியம்பகேச்வரரை தரிசித்துவிட்டு வரும் போது அங்கே முகலிங்கம் ஒன்றை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜை செய்யத் தொடங் கினார். நாளாக ஆக ஏதோ ஒரு வகையில் அவருக்கு மன நிம்மதி கிடைத்து வந்தது.

ஒருநாள் இரவு அவரது கனவில் ஒரு பெரியவர் வந்தார். ‘`திருவாரூர் பக்கத்தில் ‘முக்கண்ணன் ஊர்’ என்று சிவபிரானை தரிசித்து விட்டு வா. உனது பிரச்னைகள் தீரும்” என்று தெரிவித்தாராம். அது முதல் தாம் சந்தித்த நண்பர்கள், கோயில் குருக்கள் என்று பலரிடமும் ‘முக்கண்ணன் ஊர்’ என்பது எது? என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

[X] Close

[X] Close