இப்படிக்கு... மனதில் நிறைந்தது திருவரங்கம்! | Readers Feedback letters - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

இப்படிக்கு... மனதில் நிறைந்தது திருவரங்கம்!

ண்ணீர் துளிர்க்கும் அபூர்வ லிங்கத்தின் மகிமையையும், அந்தக் கோயிலின் நிலையையும் படித்து நெகிழ்ந்தோம். சிறப்புப்பெற்ற அந்தச் சிவாலயம் விரைவில் கும்பாபிஷேகம் காணும்.

- கே.சுப்ரமணியம், திருச்சி

கா சிவராத்திரியைச் சிறப்பிக்கும் விதம் சக்தி விகடன் தந்த ஆலயக் கட்டுரை ஒவ்வொன்றும் அற்புதம். குறிப்பாக பீமேஸ்வரர் கோயில் குறித்த தகவல்கள், இதுவறை நாங்கள் அறிந்திராதவை.

- சொ.வீரக்குமார், கடலூர்

ர்மவினை குறித்த கேள்விக்கு வங்கிக் கணக்கை மேற்கோள் காட்டி, சண்முக சிவாசார்யர் அளித்த பதிலை அற்புதம்!

- எம்.சோமசுந்தரம், திருப்பூர்

சுக்ர யோகம் லக்ன பலன்கள் - சக்தி ஜோதிடத்தின் கட்டுரை பயனுள்ள ஒன்று.
 
- ப.மூர்த்தி, பெங்களூரு

திருவரங்கத்தை மனதில் நிறைத்து விட்டது ரங்கராஜ்ஜியம் தொடர். அற்புதத் தகவல்களோடு அசத்தலாய் தொடர்கிறது!

- சி. வேணுப்ரியா, மதுரை-2

டைசிப்பக்கக் கதைகள் எங்களுக்கான பாடங்கள் என்றே சொல்லலாம்; அழகு!

- ப.மூர்த்தி, பெங்களூரு

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close