மண்... மக்கள்... தெய்வங்கள்! - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்! | Village Gods Thanjavur Kodiyamman - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/02/2019)

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ண்ணெடுத்துக் கோயில் கட்டுதல், கிராம தெய்வ வழிபாட்டில் மிக முக்கிய மரபு.  தங்கள் பூர்வீகக் கிராமத்திலிருந்து அறுபட்டு வேறு பகுதிகளுக்கு பிழைக்கச் சென்று, சீரும் செழிப்புமாக வாழும் மக்கள், தங்கள் தலைமாடு காக்கும் மூத்தோனுக்கு வாழும் நிழலிலேயே கோயில் கட்ட விரும்பினால், பூர்வீகக் கோயிலி லிருந்து மண்ணெடுத்து வரவேண்டும். அதையே மூல மண்ணாகக் கொண்டு கோயிலை எழுப்ப வேண்டும்.

திருச்சி காவிரிக்கரையில் பிறந்த காத்தவராயன் நெல்லைச் சீமையின் குக்கிராமத்தில் கோயில் கொண்டாலும், தென்மாவட்டத்தைப் பூர்வீக மாகக் கொண்ட கருப்பன் கொங்கு மண்டலங்களில் கோயில் கொண்டாலும், பாண்டிய நாட்டுக் காவல் தெய்வமான பெரியாச்சி தஞ்சை மாவட்டத்துக் கிராமங்களில் காவல் தெய்வமாக வீற்றிருந்தாலும் அவர்கள் அமர்ந்திருக்கும் பீடத்தினடியில் பூர்வீக மண் உறைந்திருக்கவேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close