ஜாதகத்தில் சுக்ரனும் சுகபோகமும்! | Role and Importance of Venus in Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

ஜாதகத்தில் சுக்ரனும் சுகபோகமும்!

லகில் சகல செளபாக்கியங்களோடும் இன்பமயமான அனுபவங்களைச் சந்தித்தும், பெரும் மகிழ்வோடு வாழ்வதற்கு ஜாதகத்தில் சுக்ரன் வலுப்பெற்றிருக்கவேண்டும்.

சுக்ரன் பலம்பெற்றுத் திகழ்வதோடு, குறிப்பிட்ட கிரகங்களோடு அவர் சேர்ந்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட பலன்கள் கைகூடும். அவ்வகையில் ஜாதகத்தில் எந்தெந்தக் கிரகத்துடன் சுக்ரன் சேர்ந்திருந்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை அறிவோம்.

சுக்ரன் - சூரியன்: இந்தச் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலோ அல்லது இந்தச் சேர்க்கை உள்ள இடத்துக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்்பட்டிருந்தாலோ அசுப பலன்கள் நீங்கி, பெரிய மனிதர்களின் தொடர்பையும், செல்வச் செழிப்பான வாழ்க்கையையும் பெறுவார்கள்.