அதிர்ஷ்டம் நிறைந்த அஸ்தம்! | Lucky star Hastham - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

அதிர்ஷ்டம் நிறைந்த அஸ்தம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

ந்திரனின் ஆதிக்கத்தில் இரண்டாவது நட்சத்திரம் இது. நினைவாற்றலுக்கும் கற்பனைக்கும் உரிய கிரகமான சந்திரனின் ஆதிக்கத்திலும் சுயமுயற்சி, தன்மானம் ஆகியவற்றுக்கு உரிய கிரகமான புதனின் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களை யவன ஜாதகம்  ‘பரோபகாரீ ஸர்வக்ஞோ...’ என்கிறது. அதாவது, தனவானாகவும், சாகசம் புரிபவனாகவும், பிறருக்கு உதவுபவனாகவும், சகலமும் அறிந்தவனாகவும் இருப்பீர்கள் என்கிறது.

பிருஹத்ஜாதகம், நீங்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பவர்கள், கொஞ்சம் துடுக்கானவர்கள் என்கிறது. ஜாதக அலங்காரம், ‘இன்பமுறுங் குறிப்புடையன், சூரன், அழகியன், கடினன், இனிய புத்தி...’ என்கிறது. அதாவது, அடிக்கடி பசி உடையவனாகவும், மக்கள் வணங்கும்படியாகவும், வீரம், அழகு, கடின சுபாவம், நல்ல புத்தி ஆகியவற்றை உடையவன் என்றும் உங்களைச் சிலாகிக்கிறது.