ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா? | Can a boy and a girl having the same Lagna marry each other? - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

? என் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பது பற்றியும், எனக்கு எந்த மாதிரியான வேலை அமையும் என்பது பற்றியும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- எஸ்.தம்பிதுரை, கும்பகோணம்

தங்கள் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில், உங்கள் லக்னத்துக்கு 11-ல் குரு இருக்கிறார். அது குருவின் சொந்த வீடாகிய மீனமாக இருப்பது கூடுதல் சிறப்பு. 2-ம் அதிபதி 11-ல் அல்லது 11-ம் அதிபதி 2-ல் பரிவர்த்தனை பெற்றிருப்பதும், 11-ம் அதிபதி 11-லும் 2-ம் அதிபதி 2-லும் இருப்பின் செல்வந்த யோகம் என்று சொல்வார்கள்.

தங்கள் ஜாதகத்தில் 10-க்கு உடைய சனி 3-ல் மறைவு பெற்றிருக்கிறார். கோசாரப்படி சனி 3-ல் இருப்பது சிறப்பானதுதான். எனினும் சனி 8-ம் பார்வையுடன் தன் வீட்டுக்கு 6 மற்றும் 7-ம் வீடாகிய கடகத்தில் இருப்பதால் ஜீவன வகையில் சில தடைகள் ஏற்படுகின்றன. மேலும் 11-ல் குருவுடன் சனியின் உப கோளாகிய மாந்தி இணைந்துள்ளது. தற்போது குருதசை 2021 வரை உள்ளது. குரு 8 மற்றும் 11-க்கு உடையவர் என்பதால், குரு தசை முடியும்போது நன்மையே செய்துவிட்டுச் செல்வார். பிறகு வரும் சனி தசையும் படிப்படியான வளர்ச்சியைத் தரும். தற்போது மாந்தியுடன் சேர்ந்த குருதசை நடைபெறுவதால், தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது.

? பிறந்த தேதி - 28.8.1965. பிறந்த ஊர் - சென்னை. பிறந்த நேரம் - காலை 10 மணி. ஜாதகக் குறிப்பு அனுப்ப முடியவில்லை.  என்னால் ஒரே வேலையில் நிலைத்திருக்க முடியவில்லை. இதற்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா?

- டி.வி.கணேசன், புதுதில்லி 122 001

தாங்கள் குறிப்பிட்டு அனுப்பிய விவரங்களைக்கொண்டு ஜாதகம் கணித்துப் பார்த்ததில், தாங்கள் உத்திர நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்திருக்கிறீர்கள். தங்களின் லக்னம் துலாம். லக்னத்துக்கு 10-க்கு உடைய கிரகம் சந்திரன், 12-ல் கன்னியில் மறைந்திருக்கிறார். 12-க்கு உடைய புதன் 10-ல் உள்ளார். இது பரிவர்த்தனை யோக அமைப்பாகும்.

இருந்தாலும் கர்மாதிபதி 12-ல் மறைவு பெற்றிருப்பதால், செய்யும் வேலைக்கு ஏற்ற வருமானம் கிடைக்காது. அத்துடன், பணியிடத்தில் அடிக்கடி அவமதிப்புகளைச் சந்திக்க நேரிடும். அனுகூலமான பாக்கிய அமைப்புகள் இருந்தால், இளம் வயதிலேயே நல்ல வேலை, வருமானம், பணியிடத்தில் மதிப்பு, பதவி உயர்வு கிடைத்தல் போன்ற சுபபலன்கள் ஏற்படும்.

கர்மஸ்தானாதிபதி அனுகூலமாக இல்லையென்றால், செய்யும் வேலைக்கு ஏற்ற வருமானம் கிடைக்காது என்பதுடன், அடிக்கடி அவமதிப்புகளுக்கு ஆளாகி, அதனால் ஏற்படும் மன வருத்தத்தின் காரணமாக வேறு வேறு வேலை என்று மாறிக்கொண்டே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தங்கள் ஜாதகத்தின்படி தங்களுடைய தொழில் ஸ்தானம் என்பது சர ராசியான கடகமாக இருப்பதால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படவே செய்யும். சந்திரன் வழிபட்டு வரம் பெற்ற சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் ஓரளவு நிவாரணம் பெறலாம்.

[X] Close

[X] Close