ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை | Astrological predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

ங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானாதிபதியான புதன், லாப வீட்டில் தொடர்வதால், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறுவீர்கள். உறவினர்களில் சிலர் உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் நண்பர்கள் தக்கநேரத்தில் உதவுவார்கள்.

பிள்ளைகளின் தேர்வு, உயர்கல்வியில் கவனமாக இருங்கள். கர்ப்பிணிப் பெண்கள் வெளி உணவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். சகோதரர்கள் வகையில் பயனடைவீர்கள். வியாபாரத்தில், வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில், பணிகளைக் கொஞ்சம் போராடி முடிக்கவேண்டி வரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வாய்ப்பு வரும்.

முற்பகுதியில் போராடினாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும் நேரம் இது.

[X] Close

[X] Close