மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்! | Significance of Panguni Uthiram - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!

தொகுப்பு: நமசிவாயம்

ங்குனி மாதம், பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். ‘பலி விழா பாடல் செய் பங்குனி உத்திர நாள்’ என்று பங்குனி உத்திரத்தைப் போற்றுகிறார் திருஞான சம்பந்தர். ‘பலி’ என்றால் செழித்தல், கொடுத்தல், விசாரித்தல் என்றெல்லாம் பொருள் உண்டு. ஆக... பெற்ற பயனை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழும் பலி விழாவாகவும் திகழ்ந்துள்ளது பங்குனி உத்திரம். எனவே, இந்த நாளில் எல்லோருக்கும் அன்னமிட்டு பசிப்பிணியைப் போக்குவார்களாம் பக்தர்கள்.

 பங்குனி உத்திரத்தன்று திருவிளக்கு தீபத்தில், சிவபெருமானும் பார்வதிதேவியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். பங்குனி உத்திர பூஜை முடித்ததும் வயதான ஏழைத் தம்பதிக்கு உணவிட்டு உபசரித்தால் புண்ணியம் சேரும்.

மேலும், முறைப்படி பங்குனி உத்திர விரதம் இருப்பதுடன், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, ஆலயங்களுக்கு வரும் அடியவர்களுக்கு நீர்மோர் அளிப்பதால் பாவம் நீங்கும்; பகை விலகும்; பெரும் புண்ணியம் சேரும்.

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பமாகும் நாள் பங்குனி உத்திரம். இந்த மாதத்தில் பெய்யும் மழையை, ‘பங்குனிப் பழம்’ என்பர் விவசாயிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க