காரடையான் நோன்பு | Spiritual significance of Karadaiyan Nonbu - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

காரடையான் நோன்பு

ஆர்.நந்தினி, மதுரை

தீர்க்கசுமங்கலி வரம் அருளும் அற்புதமான விரதம் காரடையான் நோன்பு. மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் அனுஷ்டிக்கபப்டுவது இந்த நோன்பு. சாவித்திரி நோன்பு, காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு என்று பலவாறாகப் போற்றப்படும் இந்த விரதம் மகாபதிவிரதையான சாவித்திரியால் நோற்கப்பட்டு, அவள் கணவனை மீட்க உதவியது என்கின்றன ஆன்மிக நூல்கள்.

மகாபாரதத்திலும் தேவி பாகவதத்திலும் சாவித்திரியின் பெருமைகள் சொல்லப்படுகின்றன. மகாபாரதத்தில், வன பர்வத்தில், 299-ம் அத்தியாயத்தில் மார்க்கண்டேய உபதேசத்தில் சாவித்திரியின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. இந்த சாவித்திரி உபாக்கியானத்தை யார் படிக்கிறார்களா, கேட்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாவித நலன்களும் கிடைக்கப்பெறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க