வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்? | Spiritual question and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

வழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

? மனிதர்களுக்குப் பயன் தரும் பல மிருகங்கள் உள்ளன. ஆனால்,  வழிபாடுகளில் நாம் பசுக்களுக்கு மட்டும் சிறப்பிடம் தருகிறோமே ஏன்?

-எம்.ராம்சுந்தர், சென்னை-26

இந்த உலகத்தில், பல பொருள்கள் கடைகளில் விற்பனை செய்யப் படுகின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் வேறு வேறு விலையை வைத்து விற்பதையும் நாம் அறிவோம். இதிலிருந்து அனைத்து பொருள்களும் ஒன்றல்ல என்பதும் ஒவ்வொன்றும் ஒரு தன்மை, ஒரு குணம் உடையது என்பதும் நமக்குத் தெரியவருகிறது. பொருள்களின் தன்மை நம்முடைய பயன்பாட்டின்படி வேறுபட்டு இருக்கிறது.

அதேபோல் மிருகங்கள் பல இருந்தாலும், ‘கோமாதா’ என்று நாம் அழைக்கும் பசு, புனிதத்துவம் நிறைந்ததாகப் போற்றப்படுகிறது.