ரங்க ராஜ்ஜியம் - 25 | Ranga Rajyam: Spiritual history - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/03/2019)

ரங்க ராஜ்ஜியம் - 25

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்
    பதங்களும், பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி யனலும்
    பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல்மா ருதமும் குரை கடலேழும்
    ஏழுமா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான்
    அரங்கமா நகரமர்ந்தானே!
- பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்.

திருவெள்ளக்குளத்தில் நீராடிக்கொண்டிருந்த குமுதவல்லி, அந்த நொடியே திருவாலி மன்னன் நீலனின் மனதில் விழுந்து, அவனை ‘இவள் எனக்குரியவள்’ என்று எண்ணும்படிச் செய்து விட்டாள். மன்னனாயிற்றே? குதிரையைவிட்டு இறங்கிச் சென்று அவளோடு பேச அவனுடைய ஸ்தானமும் கம்பீரமும் தடையாகி நின்றன.

[X] Close

[X] Close