தோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள்! | Astrology prediction for Thosham - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

தோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள்!

பிள்ளையாரின் அருளைப் பெறலாம்

முழுமுதற் கடவுளாம் பிள்ளையார், வெவ்வினைகளை வேரறுக்கவல்ல தெய்வம் ஆவார். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் முறைப்படி விநாயகரை வழிபட்டால், சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.
 
திருமண வரம் வாய்க்கவும், நோய்கள் குணமாகவும், குழந்தைச் செல்வம் கிடைக்கவும், வேலை வாய்ப்பு பெறவும், கடன் தொல்லைகளும் பித்ருதோஷங்களும் நீங்கவும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பிள்ளையாரை வழிபட்டு பலனடையலாம். இந்தத் திருநாளில், இங்கு தரப்பட்டிருக்கும் விவரப்படி இலைகள், பூக்கள் மற்றும் கனிகளைப் பிள்ளையாருக்குச் சமர்ப்பித்து வழிபடுவதால், விசேஷ பலன்களைப் பெறலாம் என்று ஆன்மிக ஆன்றோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க