வினைகள் தீர்க்கும் விசாகம் | Problem solving Visakam - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

வினைகள் தீர்க்கும் விசாகம்

நட்சத்திர குணாதிசயங்கள்

குரு பகவானின் 2-வது நட்சத்திரம் விசாகம். முருகக் கடவுளின் அவதார நட்சத்திரம்.

`இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் புத்திமானாகவும், முன்கோபியாகவும், வலது பக்கத் தில் மரு மச்சம் உடையவராகவும், தான தர்மம் செய்பவராகவும், எவ்வித பேதமும் பார்க்காமல் நியாயத்தைப் பேசுபவராகவும் இருப்பார்கள்’ என்கிறது நட்சத்திர மாலை எனும் நூல்.

`நீதிமானாகவும், அரசர் களுக்கு இனியவராகவும், இனிமையாகப் பேசுபவராகவும் நான்கு வேதங்களை அறிந்தவராகவும், சற்றே முன்கோபம் இருந்தாலும் நற்குணவானாகவும், மக்களால் வணங்கப்படுபவனாகவும் இறை வழிபாட்டில் தீவிரமான வனாகவும், யானை, குதிரை மீதேறி சண்டையிடுவதில் வல்லவனாகவும் இருப்பார்ர்கள்’ என்கிறது ஜாதக அலங்காரம்.

பிருகத் ஜாதகம், ‘கல்ஹக்ருத் விசாகாஸூ...’ என்கிறது. அதாவது, நீங்கள் சற்றே பொறாமை கொண்டவர், கலகம் செய்விப்பவர், உலோபி, சொல் திறமை உடையவர், ஒளி பொருந்தியவர் என்று இந்த நட்சத்திரக்காரர்களின் குணநலன்களை விவரிக்கிறது.