புது மனை வாங்கும்போது... | Astrology tips for buy a new land - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

புது மனை வாங்கும்போது...

வழிகாட்டும் மய மதம்!

சொந்தவீடு என்பது சாமான்ய மக்கள் அனைவருக்குமான கனவு. சிறுகச் சிறுக சேமித்து ஆசையுடன் சொந்த வீட்டுக்கான மனை வாங்கும்போது, நாம் ஒவ்வொருவரும் அவசியம் கவனிக்கவேண்டிய அதிமுக்கிய விஷயங்கள் குறித்து ஞானநூல்கள் வழிகாட்டுகின்றன.

மய மதம் முதல் பாகம் 3-வது அத்தியாயத்தில், கிரகிக்கத்தக்க மனை, இகழத்தக்க மனை, புகழத்தக்க மனை ஆகியவை குறித்த தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதாவது, இடத்தின் (பூமி) நிறம், மணம், சுவை, வடிவம் ஆகியவற்றின் தன்மைகளை அறிந்து, நல்ல இடத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்கிறது மய மதம். அவ்வகையில் அனைவருக்கும் ஏற்புடைய நிலம் குறித்த தகவலைத் தெரிந்துகொள்வோம்.