விழாக்கள் விசேஷங்கள்! | Varaha Jayanti and Matsya Jayanti - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

விழாக்கள் விசேஷங்கள்!

23.04.19 வராஹ ஜயந்தி :

இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து தன் பக்தர்களையும், தேவர்களையும் காக்க வேண்டி பிரம்மாவின் நாசித் துவாரத்திலிருந்து, வெள்ளைப் பன்றியின் உருவில் மகா விஷ்ணு தோன்றிய புண்ணிய தினம் இன்று.

29.04.19 திருநாவுக்கரச பெருமான் குருபூஜை :

சேவையால் ஈசனை மகிழ்வித்து ‘அப்பரே’ என்று காழிப்பிள்ளையால் அழைக்கப்பட்ட திருநாவுக்கரச பெருமான் தனது 81 வது வயதில் திருப்புகலூரில் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் மோட்சம் அடைந்தார். உழவாரத் திருப்பணியின் நாயகனாம் அப்பர் பெருமானின் திருப்பாதம் வணங்குவோம்!.

02.05.19 மத்சய ஜயந்தி

திருமாலின் முதலாவது அவதாரம் மச்சம். கிருத யுகம் நடைபெறும் போது திருமால் மீன் வடிவில் தோன்றி சோமுகாசுரனை சம்ஹாரம் செய்து வேதங்களையும், உலக உயிர்களையும் காப்பாற்றினார். மேல்பாகத்தில் நான்கு கைகளுடன் தேவருபமாகவும், கீழ்பாகத்தில் மீனின் உருவாகவும் கொண்ட மச்ச பெருமாள் அவதரித்த தினம் இன்று.

02.05.19 - ஸ்ரீகோதண்டராமஸ்வாமி ஆலய பிரமோத்சவ விழா!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெருமுடிவாக்கத்தில் அருளும் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி ஆலய பிரமோத்சவ விழா வரும் 02.05.19 அன்று துவாஜாரோகணம் நிகழ்வோடுத் தொடங்கி 11.05.19 பட்டாபிஷேக விழா வரை 10 நாள்கள் விமரிசையாக நடைபெறவுள்ளது. விழாவின் சிறப்பாக 08.05-19 அன்று திருத்தேரும், 11.05.19 அன்று காலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளது.

05.05.19 சிறுதொண்டர் குருபூஜை

ஈசன் கேட்டால் எதையும் கொடுப்பேன் என தனது மகவையும் வாளால் அரிந்து ஊட்டிய மகத்தான சிறுதொண்ட நாயனார் சித்திரை பரணியில் மோட்சம் அடைந்தார். செயற்கரியச் செயலைச் செய்த சிறுத்தொண்டரின் பக்தியைப் போற்றுவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க