அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை! | Vilvam prayer for Sri Mayuravalli thayar - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை!

முதலாழ்வார்கள் எனப்படும் மூவரில் ஒருவர் பேயாழ்வார். அனைவரும் அச்சப்படும் வகையில் பெய்யும் மழையைப் பேய்மழை என்பதுபோல, எவரொருவரும் பெருமாளுக்கு எதிராக அபவாதம் செய்ய அஞ்சும்படி, வீரமாக பெரும் பக்தி செய்ததனால் பேயாழ்வார் என்று பேறு பெற்றார். நாராயணனின் இடைவாளான நந்தகமே பேயாழ்வாராக அவதரித்தது என்கின்றன புராணங்கள்.

பேயாழ்வாரின் திருக்கதை

முன்பொரு காலத்தில் நாராயணனின் வாளான நந்தகம்,  புருஷரூபம் கொண்டது. `மஹான்’ என்று பெருமாளால் பெயர் சூட்டப்பட்ட அந்தப் புருஷர், பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்தார். ஒருநாள், அவர் தனக்கு மெய்ஞ்ஞான உபதேசம் வேண்டுமென்று மகாலட்சுமித் தாயாரை வேண்டிக்கொண்டார். பெருமாளுக்குக் கைங்கர்யமும் திருவாராதனமும் செய்வதற்கு மேலான மெய்ஞ்ஞானம் இல்லை. இதை உலகுக்கும் புருஷ ரூபம் கொண்ட அந்த வாளுக்கும் உணர்த்தத் திருவுளம் கொண்டார் தாயார். ஆகவே அந்தப் புருஷரிடத்தில், “நீர் சென்று பூலோகத்தில் மயூரபுரியில் அவதரித்துப் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்து வாரும். தக்க தருணத்தில் நான் அங்கு தோன்றி உமக்கு மெய்ப்பொருளை உபதேசிப்பேன்” என்று வாக்குக் கொடுத்தார்.

அதன்படியே, மயூரபுரியில் இருக்கும் கைரவணி தீர்த்தத்தில் அல்லிமலர்களுக்கு இடையே, ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அவதரித்தார் பேயாழ்வார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க