பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்! | Reader spiritual experience of Pamban Swamigal - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்!

வாசகர் இறையனுபவம்...

னக்குக் குரு தசை தொடங்கியபோது, மகான்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடுமாறு அறிவுறுத்தினார்கள் ஜோதிடர்கள். அதில் எனக்குப் பெரிதாக விருப்பம் இல்லா விட்டாலும், `சரி... போய்தான் பார்ப்போமே' என்று தீர்மானித்து,  ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகளின் கோயிலுக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்குள்ளவர்களிடம் வழிகேட்டு, பாம்பன் ஸ்வாமிகளின் திருக் கோயிலை அடைந்தேன். அப்போது, ஆலய வாசலில் அண்டா நிறைய லட்டுகளை வைத்துப் பிரசாதமாக விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒருவர். கமகமவென்று எழுந்த வாசனையால் அப்போதே பிரசாத லட்டுவை வாங்கலாமா என்ற ஆசை எழுந்தது. ஆனாலும் தரிசனம் முடிந்தபிறகு பிரசாதம் வாங்குவதே முறை என்ற எண்ணத்தில் ஆவலை அடக்கிக்கொண்டேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க