ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள் | Aathiyum Anthamum series - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

ஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மகாமகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், ஓவியம்: மாருதி

தியும் அந்தமும் - நாம் இந்த இரண்டையும் பற்றி அடிக்கடி பேசுவது உண்டு. இதன் தத்துவம் - உண்மை விளக்கம் என்ன?

உலகத்தில் நாம் கண்களால் பார்க்கக்கூடிய, புலன்களால் அறியக்கூடிய அனைத்துப் பொருள் களுக்கும் ஓர் ஆதி உண்டு; அந்தமும் உண்டு.  மனிதப் பிறப்புக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அவனுக்குச் சிந்தனை செய்யக்கூடிய சக்தி, சிந்தனை வளம் அவன் பிறக்கும்போதே - சிருஷ்டியிலேயே இருக்கிறது.  மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதனைத் தனிமைப்படுத்துவது அந்தத் தகுதிதான். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?

மனிதன் சிந்தனை செய்துதான் வாழவேண்டும். இல்லையென்றால், சிந்திக்கும் திறன் என்ற உருப்படியை அவனுக்கு இல்லாமல் செய்திருக்க லாமே. எந்த உருப்படி நாம் பிறக்கும்போது நமக்குக் கிடைக்கிறதோ, அந்த உருப்படியை நாம் பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் ஒரு பயனும் இல்லை.

இந்தச் சிந்தனை என்ற தனித்தன்மையான திறமையே மனிதனை மற்ற உயிரினங்களைவிட செழுமையாக வைத்திருக்கிறது. சிந்தனையின் மூலம் மனிதன் ஆதியை அறிய முடியும்; அந்தம் இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம், தன் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

மனிதனுக்கு இப்படியான சிந்தனா சக்தி கிடைத்திருப்பதற்குக் காரணம், ஈஸ்வர கடாட்சம் என்றுதான் சொல்லவேண்டும். ‘சிந்தனை செய் மனமே’ என்று சொல்வார்கள். சிந்தனை செய்யும் போதுதான், நமக்கும் உலகத்துக்கும் சாதகம் எது, பாதகம் எது என்பதை அறியமுடியும்.