அட்சய திரிதியை அற்புதங்கள்! | Akshaya tritiya Miracles - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

அட்சய திரிதியை அற்புதங்கள்!

ஆர். நந்தினி, மதுரை

ஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி ஆகிய இருதேவியரும் தோன்றியது அட்சய திரிதியை நாளில்தான் என்கின்றன புராணங்கள்.

குபேரன், இழந்த செல்வங்களை திருமகளிடம் வேண்டிப்பெற்றதும் இந்நாளே. வங்காளத்தில் அட்சயதிரிதியை திருநாள் ‘அல்கதா’ என்ற பெயரில் விநாயகர் மற்றும் லட்சுமியைத் துதிக்கும் நாளாகவும், புதுக்கணக்கு தொடங்கும் நாளாகவும் திகழ்கிறது.

வடநாட்டில், ஜாட் சமூகத்தினர் அட்சய திரிதியை நாளை விவசாயத் திருவிழாவாகக் கொண்டாடு கிறார்கள். அந்நாளில் மண்வெட்டியுடன் நிலத்துக்குச் செல்லும் விவசாயி, அங்கு காணும்  விலங்குகள், பறவைகள் போன்றவற்றை நிமித்தமாகக்கொண்டு அந்த ஆண்டுக்கான விளைச்சலைக் கணிப்பார்கள். 

கெளரவர்கள் சபையில் துன்பப்பட்ட திரௌபதிக்கு ‘அட்சய’ என்று சொல்லி கிருஷ்ணர் துகில் கொடுத்தத் திருநாளும் இதுவே.

அட்சய திரிதியை நாளில் பச்சரிசி, உப்பு, மஞ்சள் போன்றவற்றை வாங்குவது தென்னாட்டு மக்களின் வழக்கம். இவை மங்கலப் பொருள்கள் என்பதோடு, லட்சுமி கடாட்சம் நிரம்பியவை ஆகும்.

கிருதயுகம் பிறந்தது ஓர் அட்சய திரிதியை திருநாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.  

தட்சனின் சாபத்தால் பொலிவிழந்த சந்திரன், விமோசனம் பெற்று மீண்டும் வளரத் தொடங்கிய திருநாள் அட்சய திரிதியை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க