திருமகள் துணையிருந்தால்... | Devotional story - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

திருமகள் துணையிருந்தால்...

தங்கம் கிருஷ்ணமூர்த்தி

கானகம் ஒன்றில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள், அவர் முன் திருமகள் தோன்றினாள்.

‘‘மகனே! முற்பிறவியில் நீ செய்த புண்ணியங்களின் பலனாக, சிறிது காலம் நான் உன்னுடன் தங்கி இருக்க வேண்டியது நியதி. என் அனுக்கிரகத்தால் இந்த நாட்டு மக்களும் மன்னனும் உன்னைப் போற்றிப் புகழ்வார்கள்’’ என்றாள் திருமகள்.

‘‘தாயே... புகழ்ச்சி- இகழ்ச்சி, இரண்டையும் சமமாகப் பார்க்கும் பற்றில்லாத துறவி நான். இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள பலர், உனது அருளுக்காக ஏங்குகிறார்கள். அவர்கள் உன் திருவருளால் மிகுந்த பலன் பெறுவார்கள்’’ என்றார் துறவி.

உடனே திருமகள், ‘‘மகனே... நாம் அனைவருமே கர்ம விதிக்குக் கட்டுப்பட்டவர்கள். உன் புண்ணியங் களுக்காக நான் உன்னுடன் இருக்கவேண்டியது நியதி. தடுக்காதே மகனே! என் திருவருள் உன்னை விட்டு விலகுவதற்கு முன் தெரிவிக்கிறேன்.’’ என்று கூறி மறைந்தாள்.

அந்த விநாடியிலிருந்து திருமகளின் திருவருள் அவரிடம் செயல்படத் தொடங்கியது. துறவியின் வசிப்பிடமான மலைச் சாரலுக்கு அருகே நகரம் ஒன்று இருந்தது. அதைப் பராந்தகன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். திருமகளின் வாக்கைச் சோதிப்பதற்காக துறவி, அந்த நகருக்குச் சென்றார். அப்போது மன்னன், தன் மந்திரிப் பிரதானிகளுடன் ராஜ்ய பரிபாலனம் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தான்.

துறவியைக் கண்ட மன்னன் அரியணையிலிருந்து எழுந்து அவரை வரவேற்று, அவரின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தான். அவன் தலையைத் தன் காலால் எட்டி உதைத்தார் துறவி. அதனால் மன்னனின் தங்கக் கிரீடம் எகிறி, சற்றுத் தொலைவில் போய் விழுந்தது. துறவியின் செய்கையால் மந்திரிப்பிரதானிகள் கடும் கோபத்தில் கொதித்தனர். வாள்களை உருவியவாறு வீரர்கள், துறவியை நெருங்கினர். சில விநாடிகளில் அரசவை அமர்க்களப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க