`இறைவனைப் பார்த்தாயா?’ - சிந்தனை விருந்து! | Devotional story - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)

`இறைவனைப் பார்த்தாயா?’ - சிந்தனை விருந்து!

தென்கச்சி கோ.சுவாமிநாதன் ஓவியம்: சேகர்

ரு மனிதனுக்குக் கடவுளைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அதற்கு என்ன வழி என்று ஒரு பெரியவரைப் பார்த்துக் கேட்டான். அவர் சொன்னார்: ‘‘காட்சிகளைப் பார்க்கவேண்டும் என்றால் கண்களைத் திறக்கவேண்டும். கடவுளைப் பார்க்கவேண்டும் என்றால் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்!’’

அவன் காட்டுக்குப் போனான். ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். கண்களை மூடிக்கொண்டான்.

‘‘கடவுளே! உன் குரலைக் கேட்க வேண்டும்’’ என்றான்.

காத்திருந்தான். அவனிடம் கடவுள் பேசவில்லை.

‘‘இறைவா, என்னுடன் கொஞ்சம் பேசமாட்டாயா?’’

அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை.

‘‘உன்னைப் பார்க்கவே முடியாதா’’ எனக் கேட்டுவிட்டு  காத்திருந்தான். எதுவும் நிகழவில்லை. ‘‘சரி! ஒரு முறை என்னைத் தொட்டு விட்டாவது போயேன்... அதுகூட முடியாதா உன்னால்’’ எனக் கேட்டான். அப்போதும் அமைதி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க