'இது என் தொழில்' - சிறு தொழில்முனைவோரின் வெற்றிக் கதை! | Tata Motors

Idhu En Thozhil' features the success stories of Small Businessmen in the logistics industry. Self Made Business people share their struggle and hardship they faced when they were mere workers and how Tata Ace (aka) 'Kutti Yanai' vehicle changed their lives forever, making them an Entrepreneur!
Tata Ace has earned them Hope, Wealth and Respect!

'Low Cost Airline' என்கிற குறைந்தவிலை விமானசேவையை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கைப்பயணத்தில் கொஞ்சம் உப்பு, காரம் எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து, விறுவிறுப்பான, நம்பிக்கையான, இளைஞர்களுக்கு சாதிக்கவேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டக்கூடிய படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

* பயோபிக் படங்களை சுவாரஸ்யமாக எடுப்பது என்பது ரொம்பவே கஷ்டம். சுதாவின் குருநாதர் மணிரத்னத்தின் 'குரு'வே இந்த ஏரியாவில் கொஞ்சம் பிசிறடிக்கும். ஆனால், சுதா கொங்கரா இந்தப் புனைவு கலந்த பயோபிக் கதைசொல்லலில் குருவுக்கு டஃப் ஃபைட் கொடுத்துள்ளார். வாழ்த்துகள் சுதா.... உங்ககிட்ட இந்த சமூகம் இன்னும் நிறைய எதிர்பார்க்குது!

* 'வாரணம் ஆயிரம்' சூர்யாவை மீண்டும் பார்த்ததுபோல் இருக்கிறது. நெடுமாறன் ராஜாங்கமாக நடிப்பில் ஒரு ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். ''யானையை வெச்சிக்கிட்டு ரோட்ல என்னப் பண்ணிட்டிருக்கான் பாரு'' என்பார்கள். அதுபோல ஒரு மிகச்சிறந்த நடிகனை வைத்துக்கொண்டுதான் இந்த இடைப்பட்ட 12 ஆண்டுகளில் படம் எடுத்துக்கொண்டிருந்தார்களா? சில ஆண்டுகளாக சூர்யாவின் உழைப்பு படத்தில் தெரியாது, பலரின் பேட்டிகளில்தான் தெரியும். ஆனால், சூர்யாவின் உழைப்பும், அவரது அர்ப்பணிப்பும் இந்தமுறை படத்தில் தெரிகிறது. நீங்க ஜெயிச்சிட்டீங்க சூர்யா... அடித்து ஆட, இன்னும் பல சதங்கள் - சாதனைகள் படைக்க, சிக்ஸர்கள் பறக்கவிட செகண்ட் இன்னிங்ஸுக்கான களம் தயாராக இருக்கிறது!

* ''நீங்க தோத்துட்டீங்கப்பா...'' என முகத்துக்கு நேராக விமர்சிக்கும் மகனிடம் கோபப்பட்டு கைநீட்டும் காட்சியில் 'பூ' ராமுவும், அம்மா ஊர்வசியும் தாங்கள் எப்பேர்பட்ட தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள். அந்த மூன்று நிமிட காட்சி கண்களை கலங்கடிக்கிறது!

* ஹீரோயின் பொம்மியாக அபர்ணா. சூர்யா எப்போதும் கடித்து தின்ன ஆசைப்படும் 'பன்'போலவே இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா லூசுப்பெண் கதாபாத்திரம் இல்லை அபர்ணாவுக்கு. நடிப்பையும், நம்பிக்கையையும் கண்களில் கடத்தியிருக்கிறார் அபர்ணா... கலக்கு கண்ணே!

* ராணுவ உயரதிகாரியாக நடித்திருக்கும் மோகன்பாபு சில நிமிடங்களே படத்தில் வந்தாலும் இறுதியில் ராயல் சல்யூட் அடிக்கவைக்கிறார். பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சோம் கூட ஒரு காட்சியில் வந்துவிட்டுப்போகும் அளவுக்குப் படத்தின் ஸ்டார்காஸ்ட் அவ்வளவு ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

* பாடல்கள் எந்த இடத்திலும் படத்தின் வேகத்துக்குத் தடையாக இல்லை என்பதோடு, பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.