சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

“சயின்டிஸ்ட் ஆகணும்!” - மாணவன் நித்தியன்

“சயின்டிஸ்ட் ஆகணும்!” - மாணவன் நித்தியன்
பிரீமியம் ஸ்டோரி
News
“சயின்டிஸ்ட் ஆகணும்!” - மாணவன் நித்தியன்

“சயின்டிஸ்ட் ஆகணும்!” - மாணவன் நித்தியன்

‘ஒரு கட்டுரை... ஓஹோ வாய்ப்பு’ என அசத்தியிருக்கிறார் நித்தியன்.

தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த நித்தியன், இஸ்ரோ ‘Space Touriam’ என்ற தலைப்பில் நடத்திய ஆங்கில கட்டுரைப் போட்டியின் ஜூனியர் பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.

“சயின்டிஸ்ட் ஆகணும்!” - மாணவன் நித்தியன்

‘‘சுமார் 200 பேர் இந்தப் போட்டியில் கலந்துக்கிட்டாங்க. அதில், நான் முதல் இடம் பிடிச்சேன். ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் ஸ்கூலில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு நிறைய விளையாட்டுக்களிலும் ஆர்வம். நானும் என் தம்பியும் நிறைய செஸ் போட்டிகளில் வின் பண்ணியிருக்கோம்’’ என்கிறார் நித்தியன்.

நித்தியனின் தந்தை செளந்தர்ராஜன், ‘‘கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கையால் நித்தியனுக்குப் பரிசு கொடுத்தாங்க. ஒருநாள் முழுக்க குடும்பத்துடன் இஸ்ரோவைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் கிடைச்சது’’ என்கிறார் பெருமையுடன்.

“சயின்டிஸ்ட் ஆகணும்!” - மாணவன் நித்தியன்

‘‘இஸ்ரோவுக்குள்ளே எங்க செல்போனை எல்லாம் வாங்கிவெச்சுட்டாங்க. ராக்கெட்டை எப்படி தயார்செய்வாங்க, அதுக்கு என்னென்ன தேவைனு  சொன்னாங்க. அங்கே போய்ட்டு வந்ததும், வருங்காலத்தில் சயின்டிஸ்ட் ஆகி நிறைய சாதிக்கணும்னு முடிவெடுத்திருக்கேன்.’’

நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் நித்தியன்.

- வெ.வித்யா காயத்ரி,  படங்கள்: வ.யஷ்வந்த்