Published:Updated:

` உணவு உற்பத்தி சாத்தியமா?!' - விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 12 ஒயின் பாட்டில்கள்

ஒரு வருடம் கழித்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒயின்கள், மீண்டும் பூமிக்கு திரும்ப எடுத்துவரப்பட்டு, பூமியில் பாதுகாக்கப்பட்ட ஒயினுடன் ஒப்பிடப்பட்டு சோதனைகள் நடத்தப்படும்.

ஒயின்
ஒயின்

விண்வெளிக்கு என்னென்ன பொருள்களை அனுப்பலாம், அப்படி அனுப்பப்படும் பொருள்கள் என்னென்ன மாற்றத்துக்கு உள்ளாகின்றன என நிறைய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அந்தவகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு 12 ஒயின் பாட்டில்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டின் இந்த முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒயின்
ஒயின்

பிரான்ஸ் நாட்டின் மிகச்சிறந்த ஒயினாகக் கருதப்படும் `போர்டியாக்ஸ்' ஒயின் 12 மெட்டல் பாத்திரங்களில் அடைக்கப்பட்டு அமெரிக்காவின் `நார்த்ராப் கிராமன்' என்ற விண்கலம் மூலமாக, நவம்பர் 4-ம் தேதி விண்வெளி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஒயின் பாட்டில்கள் ஒரு வருடம் விண்வெளி மையத்திலேயே இருக்கும். விண்வெளி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட அதே தேதியில் பூமியில் 12 ஒயின் பாட்டில்களும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டன.

`எல்லைகள் பிரித்தாலும் விண்வெளி இணைக்கும்!' - இஸ்ரோவைப் புகழ்ந்த பாகிஸ்தான் பெண் விஞ்ஞானி

ஒரு வருடம் கழித்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒயின்கள், மீண்டும் பூமிக்கு திரும்ப எடுத்துவரப்பட்டு, பூமியில் பாதுகாக்கப்பட்ட ஒயினுடன் ஒப்பிடப்பட்டு சோதனைகள் நடத்தப்படும். இந்தச் சோதனை மூலம் விண்வெளி மையத்தில் இருந்த ஒயின்கள் என்னென்ன மாதிரியான கதிர்வீச்சுகளுக்கும் மாற்றங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன என்று அடுத்தகட்ட சோதனைகள் நிகழ்த்தப்படும். விண்வெளியில் உணவு உற்பத்தி சாத்தியமா என்ற ஆராய்ச்சியின் ஆரம்பமாக இது இருக்கும் என்றும் தகவல்களும் ளியாகியுள்ளன.

விண்வெளி ஆராய்ச்சி
விண்வெளி ஆராய்ச்சி

ஒயினுக்கும் உணவு உற்பத்திக்கும் என்ன சம்பந்தம் என பல தரப்பிலும் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆராய்ச்சியின் தலைவரான, எர்லாங்கன் நியூரம்பெர்க் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் லிபர்ட் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

``ஒயின் தயாரிப்பில் அதிக அளவு பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் பயன்படுத்தப்படுகின்றன. உணவு உற்பத்தியிலும் பூஞ்சை, பாக்டீரியாவின் பங்கு அதிகம் என்பதால், விண்வெளியில் கதிர்வீச்சால் ஒயினில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, உணவு உற்பத்தி குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கமுடியும். விண்வெளியில் உணவு உற்பத்திக்காக திட்டமிடப்பட்ட ஆறு திட்டங்களில் இது முதல் திட்டமாகும். அடுத்தபடியாக பிஸ்கட், சிப்ஸ், சாக்லேட்களும் அனுப்பி சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள்
செயற்கைக்கோள்

இந்நிலையில், 2015-ம் ஆண்டே அமெரிக்க நிறுவனமான பட்வைஸர், புதன் கிரகத்துக்கு பார்லி விதைகளை அனுப்பி சோதனை செய்துவருகிறது. மேலும், ஸ்காட்ச், விஸ்கி போன்ற மதுபானங்களும் இதற்கு முன்பே விண்வெளி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.