Published:Updated:

கருந்துளையின் மூலம் நிகழும் நட்சத்திர மரணத்தைக் காட்சிப்படுத்திய விஞ்ஞானிகள்!

கருந்துளையின் மூலம் நிகழும் நட்சத்திர மரணத்தைக் காட்சிப்படுத்திய விஞ்ஞானிகள்!

இந்த நட்சத்திர மரண அவதானிப்புக்காகப் பல ரேடியோ தொலைநோக்கி ஆன்டனாக்கள் பல ஆயிரம் மைல் தொலைவுகளில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வளவு ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பொருளின் விரிவாக்கத்தை நுண்ணியமாக கணிப்பதற்காக இவ்வளவு மைல் தொலைவுகளில் தொலைநோக்கிகள் அமைத்துப் பயன்படுத்தப்பட்டது.

கருந்துளையின் மூலம் நிகழும் நட்சத்திர மரணத்தைக் காட்சிப்படுத்திய விஞ்ஞானிகள்!

இந்த நட்சத்திர மரண அவதானிப்புக்காகப் பல ரேடியோ தொலைநோக்கி ஆன்டனாக்கள் பல ஆயிரம் மைல் தொலைவுகளில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வளவு ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பொருளின் விரிவாக்கத்தை நுண்ணியமாக கணிப்பதற்காக இவ்வளவு மைல் தொலைவுகளில் தொலைநோக்கிகள் அமைத்துப் பயன்படுத்தப்பட்டது.

Published:Updated:
கருந்துளையின் மூலம் நிகழும் நட்சத்திர மரணத்தைக் காட்சிப்படுத்திய விஞ்ஞானிகள்!

ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக ஒரு பிரமாண்டமான கருந்துளை, ஒரு பெரிய நட்சத்திரத்தை விழுங்கி அழிப்பதை நேரடியாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வினை கண்காணிக்கவும் காட்சிப்படுத்தவும் பல ரேடியோ மற்றும் இன்ஃப்ராரெட் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதில் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷனின் 'வெரி லாங் ஃபேஸ்லைன் அர்ரே' (Very long baseline array) தொலைநோக்கியும் அடக்கம். 

பூமியிலிருந்து கிட்டத்தட்ட 150 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது  ARP 299.  IC 694 மற்றும்  NGC 3690 ஆகிய இரு கேலக்ஸிகளின் மோதல் கூட்டணியே  ARP 299 என்றழைக்கப்படுகிறது. இதில் ஒரு கேலக்ஸியின் மத்தியப் பகுதியில் நம் சூரியனை விடவும் 20 மில்லியன் மடங்கு பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. அது நம் சூரியனை விட இரண்டு மடங்கு பெரிய நட்சத்திரத்தை விழுங்கும் காட்சி ஒரு சங்கிலித் தொடர்போல 13 வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. இந்தச் சங்கிலித் தொடரினை ஆரம்பத்தில் இருந்தே கண்காணித்து வந்த விஞ்ஞானிகள், இதில் இருந்து பல முக்கியமான தகவல்களை கண்டறிந்துள்ளனர். இதற்கு முன்னர் இதே போல பல நட்சத்திர மரணங்கள் கருந்துளையின் வாயிலாக நிகழ்ந்துள்ளன. ஆனால் அவையாவும் அளவில் சிறியவையாகவே இருந்துள்ளன. அது போல நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதால் அது சாதாரண நிகழ்வாகிப் போனது. ஆனால் தற்போது நடைபெற்றுள்ளது, எந்திரன் 2.0 போல ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர மரணம், எனவே தான் இதிலிருந்து பல தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது. 

 இறப்பின் தருவாயில் இருந்த அந்த நட்சத்திரத்தில் இருந்து கருந்துளையால் ஈர்க்கப்பட்ட பொருட்கள் அந்தக் கருந்துளையை சுற்றிச் சுழலும் வட்டைப் போன்ற தோற்றத்தை உருவாக்கின. அவை தீவிர எக்ஸ்-ரே கதிர்களும் அதீத வெளிச்சத்தையும் வெளியேற்றிக் கொண்டேயிருந்தன, அதோடு கிட்டத்தட்ட ஒளியின் வேகத்திற்குப் பல பொருட்களையும் வெளியேற்றிக் கொண்டிருந்தது அந்தச் சுழலும் வட்டு. ஸ்பெயினின் அஸ்ட்ரோபிஸிக்கல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் அண்டலூசியாவைச் சேர்ந்த விஞ்ஞானி மிகுவல் பெரெஸ் - டோரல் கூறுகையில், "இது போன்றதொரு நிகழ்வை இதற்குமுன் இப்படி நேரடியாக காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததில்லை" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2005, ஜனவரி 30ல் கேனேரி தீவுகளில் ஹெர்செல் தொலைநோக்கியில் தான் முதல் முதலாக இந்தச் சங்கிலித் தொடர் தொடங்கியது கண்டறியப்பட்டது.  ARP 299 ன் ஒரு கேலக்ஸியின் கருவில் இருந்து மிகத் தீவிரமான அகச்சிவப்பு உமிழ்வு கண்டறியப்பட்டது. 2005, ஜூலை 17ல் அதே இடத்தில் இருந்து ஒரு தனித்துவமான மூலத்தில் இருந்து ரேடியோ உமிழ்வு வெளியானதும் பதிவு செய்யப்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல அந்த இடத்தில் இருந்து தீவிரமான அகச்சிவப்பு மற்றும் ரேடியோ கதிர்கள் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்தன. முன்னர் கண்டறியப்பட்ட எக்ஸ்-ரே கதிர்களும் வெளிச்சமும் அதன் பின்னர் அதிலிருந்து வெளிவரவில்லை. கேலக்ஸியின் நடுவில் இருந்த தடிமனான தூசு மண்டலம் வெளியாகின்ற எக்ஸ்-ரே கதிர்கள் மற்றும் வெளிச்சத்தை உள்ளிழுத்து அதனை மீண்டும் அகச்சிவப்பு கதிர்களாக வெளியேற்றுகின்றன என விளக்கம் கொடுக்கிறார் பின்லாந்தின் யுனிவர்சிட்டி ஆஃப் டர்க்ச் ஐ சேர்ந்த செப்போ மட்டில்லா.

இந்த நட்சத்திர மரண அவதானிப்புக்காகப் பல ரேடியோ தொலைநோக்கி ஆன்டனாக்கள் பல ஆயிரம் மைல் தொலைவுகளில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வளவு ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பொருளின் விரிவாக்கத்தை நுண்ணியமாக கணிப்பதற்காக இவ்வளவு மைல் தொலைவுகளில் தொலைநோக்கிகள் அமைத்துப் பயன்படுத்தப்பட்டது. பொறுமையாக, பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பு ஒரு ஜெட் உருவாவற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகளுக்குக் கொடுத்திருக்கிறது. 

"பெரும்பாலான கேலக்ஸிகளின் மத்தியின் நம் சூரியனை விடவும் பல மில்லியன் அல்லது பில்லியின் மடங்கு நிறையைக் கொண்ட கருந்துளைகள் உள்ளன. அவை தன்னைச் சுற்றியுள்ள பொருட்களை ஈர்க்கும் போது தானாகவே அவை அந்தக் கருந்துளையைச் சுற்றி ஒரு சுழலும் வட்டை உருவாக்குகின்றன. அந்தச் சுழலும் வட்டில் இருந்து மிக வேகமாக பொருட்கள் வெளியே வீசி எறியப்படுகின்றன, இவையே ஜெட் எனப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் கருந்துளைகள் இவ்வாறாக அதிகமான பொருட்களை உள்ளிழுப்பதில்லை, எனவே அவை மிகவும் அமைதியான நிலையிலேயே உள்ளது. ஆனால் தற்போது நிகழ்ந்துள்ள இந்த நிகழ்வு அரிதாக நடந்திருக்கிறது. இதனை வைத்து ஜெட்கள் எப்படி பரிணமிக்கின்றன என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது." என்கிறார் பெரெஸ்-டோரஸ்.

இந்த நிகழ்வும் அதனைத் தொடர்ந்த ஆராய்ச்சிகளும் வானவியல் ஆய்வில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism