Published:Updated:

எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள்? - இன்று விண்ணில் ஏவப்படுகிறது!#GSLVMark3D2 #ISRO

``வானம் மேகமூட்டமின்றித் தெளிவாக இருந்தால், ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதைச் சென்னையிலிருந்து கண்டு ரசிக்கமுடியும்"- இஸ்ரோ விஞ்ஞானிகள்.

எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள்? - இன்று விண்ணில் ஏவப்படுகிறது!#GSLVMark3D2 #ISRO
எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஜிசாட் 29 செயற்கைகோள்? - இன்று விண்ணில் ஏவப்படுகிறது!#GSLVMark3D2 #ISRO

இஸ்ரோ ஜிசாட்-29 என்ற செயற்கைக் கோளைத் தயாரித்துள்ளது. அதை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 என்ற ராக்கெட் மூலமாக இன்று மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளனர்.  இது ஶ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஆய்வகத்திலிருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட். அங்கிருக்கும் இரண்டாவது தளத்தில் ஏவப்படும் 33-வது ராக்கெட். இந்திய தகவல் தொடர்புத் துறையை அடுத்தகட்டத்துக்குத் தரமுயர்த்த இந்தச் செயற்கைக்கோள் உதவியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று பகல் 2.50 மணிக்கு அதன் இறுதி 26 மணிநேர கவுண்ட் டவுன் தொடங்கியது. இந்த ராக்கெட் மூலம் அதிகபட்சம் பத்து டன் எடை வரை தூக்கிச் செல்லமுடியும். அதில் தற்போது அனுப்பவிருக்கும் செயற்கைக்கோள் 3,423 கிலோ எடை கொண்டது. 36,000 கி.மீ தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்படும். கடலூருக்கும் ஶ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கஜா புயல் கரையைக் கடக்குமென்று வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர். தற்போது புயல் திசை மாறிவிட்டதால் ராக்கெட்டை ஏவுவதிலிருந்த ஒரு தடையும் விலகிவிட்டது. அதோடு ராக்கெட்டும் அனைத்துவிதமான காலநிலையையும் சமாளிக்கும் திறனோடுதான் அமைக்கப்பட்டுள்ளது.