Published:Updated:

இந்தியாவின் ஆங்ரி பேர்டு செயற்கைக்கோள்! - பாதுகாப்புத் துறைக்கு வரப்பிரசாதம்

இந்தியாவின் ஆங்ரி பேர்டு செயற்கைக்கோள்! - பாதுகாப்புத் துறைக்கு வரப்பிரசாதம்
இந்தியாவின் ஆங்ரி பேர்டு செயற்கைக்கோள்! - பாதுகாப்புத் துறைக்கு வரப்பிரசாதம்

ங்ரிபேர்டு அல்லது ஜிசாட் 7A என அழைக்கப்படும் செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தியது. இந்த வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 17-வது மற்றும் கடைசி மிஷன் இது. இந்தச் செயற்கைக்கோளின் மூலம் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோர் பயனடைவர்.

Photo Credit: ISRO

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி -எஃப்.11 ராக்கெட், ஜிசார்-7ஆ செயற்கைக் கோளை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ஜிசாட்-7ஏ (GSAT-7A) என்கிற செயற்கைக்கோள் ஜிசாட்-6 மற்றும் ஜிசாட்-7 ஆகிய செயற்கைக்கோள்களுடன் அனுப்பப்படுகிறது. இந்த ஜிசாட் 7A-வின் சிறப்பு என்னவென்றால், இது இந்தியப் பாதுகாப்புப் படையை மேலும் நவீனமாக்கவிருக்கிறது. குறிப்பாக, இந்திய விமானப்படை அதிகளவில் பயன்பெறும். இதன்மூலம் விமானப்படையின் அனைத்து கண்காணிப்பு மண்டலங்களையும் ஒருங்கிணைக்க முடியும். மேலும், ட்ரோன்களின் செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும். இந்த  'ஆங்ரி பேர்டு' செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை கொண்டது. செயற்கைக் கோளை விண்ணில் ஏவப் பயன்படுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் 50 மீட்டர் உயரம் மற்றும் 440 டன் எடை கொண்டது. இதற்கு முன்பு வரை இந்திய விமானப்படை அதிநவீன தகவல்களைப் பெற பிற நாட்டின் செயற்கைக்கோள்களின் உதவியை நாடி வந்தது.

கடந்த 2013-ல் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 இந்திய கப்பல் படைக்குத் தகவல்கள் பெற உதவியாய் இருந்தது. ஜிசாட்-7A செயற்கைக்கோள் இனி நம் விமானப்படைக்குத் தேவையான அனைத்து விதமான அதிநவீன தகவல்கள் கொடுக்கவுள்ளது. இதுவரைக்கும் இந்தியா மொத்தம் 13 செயற்கைக் கோள்களை ராணுவ பயன்பாட்டுக்காகப் பயன்படுத்திவருகிறது. தற்போது இதுவும் அந்தப் பட்டியலில் இணையும்.