Published:Updated:

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆறு மாத ஆய்வு! - 197 நாள்களுக்குப் பின்னர் பூமிக்குத் திரும்பிய வீரர்கள்

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆறு மாத ஆய்வு! - 197 நாள்களுக்குப் பின்னர் பூமிக்குத் திரும்பிய வீரர்கள்
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆறு மாத ஆய்வு! - 197 நாள்களுக்குப் பின்னர் பூமிக்குத் திரும்பிய வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆறு மாதங்கள் கழித்து மூன்று விண்வெளி வீரர்கள் நேற்று பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர். 

நாசாவைச் சேர்ந்த செரீனா அவுன்-சான்ஸலர் (Serena Aunon-Chancellor), செர்கே ப்ரோகோபியேவ் (Sergey Prokopyev), ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் கெர்ஸ்ட் (Alexander Gerst) ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் ரஷ்ய விண்கலத்தில் கஜகஸ்கதான் அருகே தரையிறங்கினர். நேற்று காலை 11 மணி அளவில் அவர்கள் தரையிறங்கினர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்.

விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் தகவல் உறுதி செய்தவுடன் ரஷ்ய மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மற்றும் வாகனங்கள் மூலம் தரையிறங்கிய இடத்தை அடைந்தனர். அங்கே வளிமண்டலத்தில் நுழைந்ததால் ஓரளவு தீப்பற்றி இருக்கும் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை வெளியே கொண்டு வந்தனர் மீட்புப் படையினர். சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற மூன்று வீரர்களில் அவுன்-சான்ஸலரும் செர்கே ப்ரோகோபியேவும் முதல் முறையாகச் சென்றுள்ளனர். கெர்ஸ்ட்டுக்கு இது இரண்டாவது விண்வெளி பயணம். அவர் மொத்தமாக 362 நாள்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.