Published:Updated:

செவ்வாய் மிஷனுக்காக `ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ விண்கலம் - காரணம் சொல்லும் எலான் மஸ்க்

செவ்வாய் மிஷனுக்காக `ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ விண்கலம் - காரணம் சொல்லும் எலான் மஸ்க்
News
செவ்வாய் மிஷனுக்காக `ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ விண்கலம் - காரணம் சொல்லும் எலான் மஸ்க்

செவ்வாய் மிஷனுக்காக `ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ விண்கலம் - காரணம் சொல்லும் எலான் மஸ்க்

விண்வெளி போக்குவரத்து நிறுவனமாகக் கருதப்படும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் செவ்வாய்க்கு செல்லவிருக்கும் 'ஸ்டார்ஷிப்' விண்கலத்தின் முன்மாதிரி ஒன்றின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார். 

இருப்பதிலேயே முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் இந்த விண்கலம் எந்த உலோகத்தில் செய்யப்பட்டது தெரியுமா? இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் கட்டப்பட்டுள்ளது. இது பலரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால், ஏன் இந்த முடிவை ஸ்பேஸ் எக்ஸ் எடுத்தது எனப் பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதுவும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இப்போது பயன்படுத்தும் கார்பன் ஃபைபரைவிட எடைகூடுதல் அல்லவா என்று கேட்டார் ஒரு ட்விட்டர்வாசி.

இதற்குப் பதிலளித்த மஸ்க், ``மிகவும் குறைந்த வெப்பத்தில் கார்பன் ஃபைபரை விட நன்றாகவும், சாதாரண வெப்பத்தில் மோசமாகவும், அதிக வெப்பத்தில் மிக நன்றாகவும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் செயல்படும்” என்றார். வித்தியாசமான 300 சீரிஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அலாய் இதற்காகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த 'ஸ்டார்ஷிப்' பற்றிய முக்கிய தொழில்நுட்ப தகவல்கள் சோதனைக்குப்பின் தானே ஏப்ரல் மாதத்திற்குள் விளக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மனிதர்களைச் செவ்வாய்க்கு அழைத்துசென்று காலனிகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளார் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.