Published:Updated:

``இவையெல்லாம் நடந்தால் டைம் டிராவல் பண்ணலாம்!'' - அறிவியல் சொல்லும் வழி முறைகள்

``இவையெல்லாம் நடந்தால் டைம் டிராவல் பண்ணலாம்!'' - அறிவியல் சொல்லும் வழி முறைகள்
News
``இவையெல்லாம் நடந்தால் டைம் டிராவல் பண்ணலாம்!'' - அறிவியல் சொல்லும் வழி முறைகள்

``இவையெல்லாம் நடந்தால் டைம் டிராவல் பண்ணலாம்!'' - அறிவியல் சொல்லும் வழி முறைகள்

2018-ல் வெளியான 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்' படத்தில் பிரபஞ்சத்தில் பாதியை அழித்திருந்தார் தானோஸ். அதன் பிறகு, என்ன நடந்தது என்பதைக் காட்டும் விதமாக எடுக்கப்பட்டதுதான் தற்போது உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' திரைப்படம். இந்த படத்தில் தானோஸின் சதியை முறியடிக்க அவென்ஜர்ஸ் டீமுக்கு கை கொடுத்திருப்பது டைம் டிராவல் என்ற விஷயம்தான். இதற்கு மேல் சொன்னால் ஸ்பாய்லராக மாறிவிடும் என்பதால் இதோடு முடித்துக் கொள்ளலாம். அவென்ஜர்ஸ்: எண்டு கேம் படத்தைத் தவிர்த்துப் பார்த்தால்கூட டைம் டிராவலை மட்டுமே மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள் பல நூறுகளுக்கு மேல் இருக்கலாம். திரைப்படங்கள்தான் மட்டுமல்ல நிஜத்திலும் எப்படியெல்லாம் டைம் டிராவல் பண்ணலாம் என்ற வழிமுறைகளுக்கும் இங்கே பஞ்சமில்லை. 

டைம் டிராவல் என்ற விஷயத்தை தற்போதுவரை யாரும் நிரூபித்துக் காட்டவில்லை. ஆனால், என்றைக்காவது, யாரோ ஒருவர் இதைச் சாத்தியப்படுத்தலாம் என்ற நம்பிக்கை அறிவியலாளர்களுக்கு இருக்கிறது. அப்படி டைம் டிராவல் செய்வதற்கு அறிவியல் சொல்லும் வழிமுறைகளில் பிரபலமானவற்றில் சில இவை.

வார்ம்ஹோல்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டைம் டிராவல் என்று வந்துவிட்டால் அங்கே முதலிடத்தில் இருப்பது இந்த வார்ம்ஹோல்ஸ் என்ற விஷயம்தான். விண்வெளியின் இரு வெவ்வேறு பகுதிகளை இணைக்கும் ஒரு குறுக்குவழியாக இது கருதப்படுகிறது. இதனால் காலப் பயணம் சாத்தியமாகும். அது மட்டுமன்றி இதன் வாயிலாக நமது பிரபஞ்சத்திலிருந்து மற்றொரு பிரபஞ்சத்துக்குக்கூடச் சென்று வரலாம் என்ற ஒரு கருத்தும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை வார்ம்ஹோல்ஸ் என்ற ஒன்று யாராலும் கண்டறியப்படவில்லை. மேலும் இதன் அளவும் சிறியதாக இருக்கக் கூடும் என்பதால் இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. வார்ம்ஹோல்கள் பிரபஞ்சத்தில் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், அவற்றின் அளவு அணுவைவிட சிறியது. ஒரு வேளை அவற்றை நம்மால் கண்டறிய முடிந்தால் அதை மனிதர்கள் பயணம் செய்யும் அளவுக்குப் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டும். அதுவும் அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. அதைச் செய்வதற்கு நமக்கு மிகப்பெரிய அளவு ஆற்றல் தேவைப்படலாம். எவ்வளவு தேவைப்படும் என்று கேட்டால், நமது சூரியனிலிருந்து வெளிப்படும் அளவு என்று வைத்துக்கொள்ளுங்களேன் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

பிளாக் ஹோல் 

விண்வெளியில் பல இடங்களில் இருக்கும் பிளாக் ஹோல் மூலமாக டைம் டிராவல் செய்ய முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்தைத் தெரிவித்தவர்களில் மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் முக்கியமானவர். பிளாக் ஹோல் மூலமாக டைம் டிராவல் சாத்தியம் என்பதை அவர் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு இயற்கையான டைம் டிராவல் மெஷின் என்று பெயரிட்டிருக்கிறார் அவர். அதிக அளவு நிறை கொண்ட நட்சத்திரம் ஒன்று வாய்ப்பிருந்தால் அதன் இறுதிக் காலத்துக்குப் பின்னர் கருந்துளையாக உருமாறும். கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசை இருக்கும். அதனுள்ளே இருந்து ஒளிக்கூட தப்பிக்க முடியாது. எனவே, இதன் அருகே காலம்கூடக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். "விண்கலம் மூலமாக ஒரு பிளாக் ஹோலின் சுற்றுப்பாதையில் ஒரு முறை முழுமையாகச் சுற்றி வந்தால் அது பூமியில் இருக்கும் நேரத்தைவிட குறைவாகதான் அங்கே ஆகியிருக்கும். உதாரணத்திற்கு, விண்கலம் அப்படியே ஐந்து வருடங்கள் சுற்றி வந்துவிட்டு பூமிக்குத் திரும்பும்போது, இங்கே இருப்பவர்களின் வயது பிளாக் ஹோலைச் சுற்றி வந்தவர்களைவிட ஐந்து வயது அதிகமாகவே இருக்கும்" என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். பிளாக் ஹோலுக்குப் பக்கத்தில் செல்லும் எதுவுமே தப்பிக்காது எனும்போது விண்கலம் மட்டும் எப்படித் தப்பிக்கும் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம்.

அதற்கும் விஞ்ஞானிகளிடம் பதில் இருக்கிறது. மெழுகுவத்தி எரியும்போது அதன் சுடரின் வெப்பநிலை 1,400 °C என்ற அளவில் இருக்கும். அதில் நடுவே விரலை வேகமாகக் சென்று அதே வேகத்தில் பின்னால் இழுத்துவிட்டால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதே போலத்தான் குறிப்பிட்ட வேகத்தில் இயங்கினால் பிளாக் ஹோலின் ஈரப்பு விசையிலிருந்து தப்பித்துவிடலாம் என்கிறார்கள். இங்கே வேகம்தான் முக்கியம் அதை அடையும் திறனை நாம் பெற்றுவிட்டால் நமக்கு டைம் டிராவலும் சாத்தியமாகலாம். வார்ம் ஹோல்போல இல்லாமல் பிளாக் ஹோலைப் பொறுத்தவரையில் அது இருப்பது பல வருடங்களுக்கு முன்னரே உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதன் தெளிவில்லாத புகைப்படமே இப்போதுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. டைம் டிராவல் செய்ய ஆசைப்பட்டால் ஒரு பிளாக் ஹோலை அருகே செல்லவே நமக்குப் பல மில்லியன் வருடங்கள் தேவைப்படும்.  

ஒளியின் வேகத்தில் பயணம்

இந்தப் பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்தவரையில் அதி வேகமாகப் பயணம் செய்வது ஒளிதான். நொடிக்கு 186,000 மைல்கள் பயணம் செய்யும் ஒளியை முந்துவது எளிதான காரியமில்லை. ஒரு வேளை அது நடந்தால் டைம் டிராவலும் சாத்தியமாகலாம். பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் நேரம் ஒரேபோல இருப்பதில்லை. அது ஒவ்வோர் இடத்திலும் இருக்கும் காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. அதேபோல ஒளியின் வேகத்தை விஞ்சி பயணிக்கும்போது காலம் மெதுவாக நகர்கிறது. இதுவும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகவே இருக்கிறது. இதை ஒரு பரிசோதனையின் மூலமாகவும் நிரூபித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் துல்லியத்துக்குப் பெயர் பெற்ற அணுக் கடிகாரங்கள் இரண்டை ஆய்வாளர்கள் எடுத்துக்கொண்டார்கள். அதில் ஒன்று ஜெட் விமானத்திலும் மற்றொன்று தரைப்பகுதியிலும் இருந்தது. விமானம் பறக்கும் வேகத்தின் காரணமாக விமானத்தில் இருந்த கடிகாரத்தின் நேரம் சற்றுக் குறைவாகவே இருந்தது. இதேபோல் மனிதனும் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது காலம் குறைவாகவே நகரும். ஆனால், அவ்வளவு வேகத்தில் பயணிக்கும் திறன் இப்போது நம்மிடம் இல்லை.

டைம் டிராவல் செய்வதற்காகக் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான ஆற்றல் இப்போது நம்மிடம் இல்லை. ஒரு வேளை மேம்பட்ட தொழில்நுட்பத்தால் பல யுகங்கள் கழித்து காலப் பயணம் சாத்தியமாகலாம். இல்லை நடக்காமல்கூட போகலாம். ஒரு வேளை எதிர்காலத்தில் தானோஸ் போல ஒரு வேற்று கிரகவாசி அவரிடமிருக்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்தால் பிரபஞ்சத்தின் பாதியைக்கூட அழிக்கக் கூடும், அப்போது அதைச் சமாளிக்க மனிதர்கள் தயாராகவும் இருக்கலாம், அறிவியலில் எதுவும் சாத்தியம்தான்.